Mana Madurai Maamara Kilaiyilae Song Lyrics

Minsara Kanavu·1997

Minsara Kanavu movie poster
Singer
Unni Menon, K. S. Chithra and Srinivas
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

ஆண்: மானாமதுர மாமரக் கிளையிலே
பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

ஆண்: என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்

ஆண் & பெண்: {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

ஆண்: மேட்டுச் சாலையிலே
மாட்டுவண்டியிலே
ஏ போறாளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வண்ணம் என்றாள்

ஆண்: மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வான வில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஆண் & பெண்: ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா

பெண்: தந்தானே தந்தானே
காற்றும் மழையும் தந்தானே
எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே
பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே

பெண்: சிறுபிள்ளைபோல் மனமிருந்தால்
துயரில்லையே
பறவையைப்போல் உடலிருந்தால்
பயமில்லையே

பெண்: தந்தானே தந்தானே
கையில் பூமி தந்தானே
வளமோடு வாழத்தானே

பெண்: மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஆண் & பெண்: {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

பெண்: மானாமதுர மாமரக் கிளையிலே

பெண் & ஆண்: பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

பெண்: என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்....

ஆண்: தந்தானே தந்தானே
உண்ணக் கனிகள் தந்தானே
உயிரெல்லாம் தித்தித் தேனே
தந்தானே தந்தானே
பாட்டுக்குயில் தந்தானே
செவியெல்லாம் இன்பத் தேனே

ஆண்: ஒலிகளிலே ஓவியங்கள்
தெரிகின்றதே
மனத்திரையில் காட்சிகளுமே
தெரிகின்றதே

ஆண்: தந்தானே தந்தானே
மேகக் கூட்டம் தந்தானே
இடியெல்லாம் தாளம் தானே

ஆண்: மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

பெண்: ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா

ஆண்: மானாமதுர மாமரக் கிளையிலே

பெண்: ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா

ஆண்: பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி

பெண்: {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

A little space to find your voice.

About Mana Madurai Maamara Kilaiyilae

Mana Madurai Maamara Kilaiyilae is a song from Minsara Kanavu (1997). Performed by Unni Menon, K. S. Chithra, Srinivas. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer