Maari Magamaayi Song Lyrics

Sivappathigaram·2006

Sivappathigaram movie poster
Singer
Chinna Ponnu
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாரி மகமாயி யம்மா
மனக்குறைய தீர்க்குமம்மா
இருவெள்ளி வெரதம் சொல்லி
எடுத்து வர்றோம் மொளப்பாரி

குழு: {தானானே தானானை
தானானே தானானே} (2)

பெண்: காத்து மட்டும் வந்து போகும்
கட்டப்பொம்மன் கோட்டை போல
வெய்யில் படா ஓலைபின்னி
வெதச்சு வச்சோம் மொளப்பாரி

குழு: வெய்யில் படா ஓலைபின்னி
வெதச்சு வச்சோம் மொளப்பாரி

குழு: தானானே தானானை
தானானே தானானே

பெண்: நடுவினிலே பொத்தி வச்ச
நல்ல நல்ல ஓட்டில் எல்லாம்
வெதவெதமா பயிர் வெதச்சு
வெக்காளிக்கு போடுங்கம்மா....

குழு: வெதவெதமா பயிர் வெதச்சு
வெக்காளிக்கு போடுங்கம்மா....

பெண்: பாசிப்பயறு போட்ட கையில்
பவுன்பவுனா நெலைக்குமம்மா
தட்டாம்பயறு போட்ட கையில்
தரணியெல்லாம் கெடைக்குமம்மா ......

குழு: தட்டாம்பயறு போட்ட கையில்
தரணியெல்லாம் கெடைக்குமம்மா ......

குழு: தானானே தானானை
தானானே தானானே

பெண்: பச்சப்பயறு போட்ட கையில்
ஒச்சுப்பிணி ஒழியுமம்மா
மொளப்பாரி சொமந்த கையில்
மும்மாரி பொழியுமம்மா

குழு: மொளப்பாரி சொமந்த கையில்
மும்மாரி பொழியுமம்மா

குழு: தானானே தானானை
தானானே தானானே

பெண்: தோணாம தொனங்காம
மொடவநாட்டு தண்ணிவழி
மொளப்பாரி போகையில
மாரியம்மா நலந்தருவா.....

குழு: மொளப்பாரி போகையில
மாரியம்மா நலந்தருவா.....

குழு: {தானானே தானானை
தானானே தானானே} (2)

A little space to find your voice.

About Maari Magamaayi

Maari Magamaayi is a song from Sivappathigaram (2006). Performed by Chinna Ponnu. Music by Vidyasagar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer