Aasai Oviyam Song Lyrics

Manjal Veyil·2009

Manjal Veyil movie poster
Singer
Bharathwaj and Subhiksha
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆசை ஓவியம் பேசும் ஓவியம்
உன்னை வரையவேண்டும்படி வருவாயா
ஓவியம் வரைய உன்னிடம் இருந்து
வர்ணங்கள் கொஞ்சம் தருவாயா

பெண்: கை விரல் என்பது தூரிகையானால்
காய்கிதமாகவும் வருவேனே
வர்ணங்கள் என்ன நீ வந்துக்கேட்டால்
உயிரை வழித்து தருவேனே

ஆண்: அடடா அடடா உலகத்தில் இல்லை
எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை
காதலியே நீ நிறங்களின் பிள்ளை
காதலியே நீ நிறங்களின் பிள்ளை

ஆண்: ஆசை ஓவியம் பேசும் ஓவியம்
உன்னை வரையவேண்டும்படி வருவாயா

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: விண்ணை விழுங்கிய
விழிகளில் இருந்து
நீல வர்ணம் தருவாயா

பெண்: நீல வர்ணம்
இருந்த விழியில்
நீயே விழுந்து விடுவாயா

ஆண்: உதடுகள் என்னும்
செவ்வந்தி நிலத்தில்
சிவப்பு வர்ணம் தருவாயா

பெண்: உதட்டில் வர்ணம்
எதுக்கும் நேரம்
உடம்பே சிவக்க வைப்பாயா

ஆண்: கூந்தல் நெளிவில்
கூச்சம் மறந்து
கருப்பு வர்ணம் தருவாயா

பெண்: கூந்தலின் நிறத்தில்
கண் தெரியாமல்
நீயே தொலைந்து போவாயா

ஆண்: அடடா அடடா உலகத்தில் இல்லை
எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை
என்னவளே நீ ஓவிய சோலை

ஆண்: மகரந்தம் ஊறும்
மேனியில் இருந்து
மஞ்சள் வர்ணம் தருவாயா

பெண்: மஞ்சள் வர்ணம்
பொங்கும் மேனியில்
நீயே கரைந்து விடுவாயா

ஆண்: இச்சை நிலவே
பச்சை நரம்பில்
பசுமை வர்ணம் தருவாயா

பெண்: நரம்பு வழியே
கசிய கசிய
காதல் வழிய செய்வாயா

ஆண்: வளையும் வயசே
மனசில் இருந்து
வெள்ளை வர்ணம் தருவாயா

பெண்: வெள்ளை வர்ணம்
இருக்கும் மனசை
கொள்ளையடித்து செல்வாயா

ஆண்: அடடா அடடா உலகத்தில் இல்லை
எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை
இனியவளே நீ அழகுக்கு எல்லை

ஆண்: ஆசை ஓவியம் பேசும் ஓவியம்
உன்னை வரையவேண்டும்படி வருவாயா

A little space to find your voice.

About Aasai Oviyam

Aasai Oviyam is a song from Manjal Veyil (2009). Performed by Bharathwaj, Subhiksha. Music by Bharathwaj. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer