Dhooli Dhooli Manikka Song Lyrics

Thanga Pappa·1993

Singer
Sindhu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ
ஆரிரராரோ ஆரிராரோ ஆராரிராராரிரோ
ஆரிராராரிராரிரோ....

பெண்: தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
லாலி லாலி நான் பாடும் லாலி பொன்மணி நீ உறங்க
தாழம்பூவே தங்கநிலாவே மெல்ல கண்களை நீ மூட
கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட
தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க...

பெண்: வெண்பனி தூங்க தன் இதழ் தூவி
மல்லிகை பாய் விரிக்கும்
அந்த மல்லிகை தூங்க கானக் குயிலும்
ஆயிரம் பாட்டிசைக்கும்

பெண்: வெண்மதி மெல்ல தூங்கிடு என
வைகையும் தாலாட்டும்
வைகையே கொஞ்சம் ஓய்வெடு என
தென்றலும் சீராட்டும்

பெண்: அன்ன சிறகில் மெத்தை விரித்தேன்
மெல்ல கண்களை நீ மூட
கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட....
தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க

பெண்: ஆயிரம் காலம் அன்னையும் செய்த
பூஜையின் பலனாக
ஒரு தங்கக்கிளி தத்தி வந்ததோ
தாய்மடி விளையாட

பெண்: தெய்வமே இன்று பிள்ளையாய்
இங்கு வந்தது உறவாட
தேன் தமிழ் சிந்தும் முல்லையாய்
அன்னை தோள்களில் விளையாட

பெண்: முல்லைப் பூவே முத்துச்சரமே
மெல்ல கண்களை நீ மூட
கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட....

பெண்: தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க
லாலி லாலி நான் பாடும் லாலி பொன்மணி நீ உறங்க
தாழம்பூவே தங்கநிலாவே மெல்ல கண்களை நீ மூட
கண்ணம்மா தாய் மனம் தாலாட்ட
தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க...

பெண்: தூளி தூளி மாணிக்க தூளி கண்மணி நீ உறங்க

பெண்: ஆரிராரி ராராரிராரி ஆராரிராரிரோ.....

A little space to find your voice.

About Dhooli Dhooli Manikka

Dhooli Dhooli Manikka is a song from Thanga Pappa (1993). Performed by Sindhu. Music by Deva. Lyrics by Aravind Raj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer