Abirami Enakkoru Song Lyrics

Thanga Pappa·1993

Singer
K. S. Chithra
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி
பாடுகிறேன் மனம் வாடுகிறேன்
உன் திருவடி தேடுகிறேன்

பெண்: பிள்ளை வரம் தந்தவளே
பிணிக்கு மருந்தானவளே
கண் திறந்து பார்த்துவிடு
பிள்ளை உயிர் காத்துவிடு

பெண்: அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

பெண்: ஓம் என்னும் ஓங்காரப் பொருளானவள்
ஒளியாகி வெளியாகி உலகாள்பவள்
காற்றாகி கனலாகி கடலானவள்
கருவாகி உருவாகி உடலானவள்

பெண்: வயிரவி மண்டலி மாலினி சூலி
பயிரவி பஞ்சமி பார்வதி
மனிதரும் தேவரும் முனிவரும் வந்து
வணங்கிடும் தாயே அபிராமி
தாயல்லவா மனம் மாறல்லையா
இல்லை என் குரல் கேட்கலையா

பெண்: பாம்புக் குடை கொண்டவளே
பாளையத்து நாயகியே
பிள்ளைக் குறை தீர்த்து விடு
என் மகளை வாழ விடு

பெண்: விழியாலே வினைத் தீர்க்கும் காமாட்சி நீ
கிளியோடு மொழி பேசும் மீனாட்சி நீ
வேற்காட்டில் அரசாளும் கருமாரி நீ
வேப்பிலையில் துயர் போக்கும் மகமாயி நீ

பெண்: நாயகி நான்முகி நாராயணி நீ
சங்கவி சாயகி சாம்பவி நீ
ககனமும் வானும் புவனமும் ஆட
தாண்டவம் ஆடிடும் காளியும் நீ
மாறலையா மனம் மாறலையா
இல்லை நீ வெறும் கற்சிலையா

பெண்: சூலம் கொண்டு காப்பவளே
சூழும் வினை தீர்ப்பவளே
கர்மவினை நீக்கிவிடு
காலன் பயம் போக்கிவிடு

பெண்: அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி
பாடுகிறேன் மனம் வாடுகிறேன்
உன் திருவடி தேடுகிறேன்

பெண்: பிள்ளை வரம் தந்தவளே
பிணிக்கு மருந்தானவளே
கண் திறந்து பார்த்துவிடு
பிள்ளை உயிர் காத்துவிடு

பெண்: அபிராமி எனக்கொரு பதில் சொல்லடி
வேல் விழியால் பகை எரித்து துணை நில்லடி

A little space to find your voice.

About Abirami Enakkoru

Abirami Enakkoru is a song from Thanga Pappa (1993). Performed by K. S. Chithra. Music by Deva. Lyrics by Aravind Raj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer