Thanga Pappa Sandham Duet Song Lyrics

Thanga Pappa·1993

Singer
K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா

பெண்: லலலலலா லாலலலாலா....

ஆண்: லாலாலா...

ஆண்: தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே....

பெண்: தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்

ஆண்: பூமணக்கும் பெண் மயிலே
பால் மணக்கும் நேரமோ

பெண்: ம்ம்ம்...பொங்கி வரும் தாய்மையிலே
பெண் மனமும் பாடுமோ

ஆண்: அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை
பிள்ளைதான் அறிந்திடுமோ

பெண்: பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி
அன்னைக்கே புரிந்திடுமோ

ஆண்: கர்ப்பம் என்னும் கோயிலிலே
கண்ணை மூடித் தூங்கும்

பெண்: பிள்ளை உன்னைக் காண்பதற்கே
தாயின் நெஞ்சம் ஏங்கும்

ஆண்: பல ஜென்மம் தொடரும் பந்தமே
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்

பெண்: தந்தை உந்தன் கண்களிலே
தங்க மகள் பார்க்கிறேன்

ஆண்: ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி
காதை வைத்து கேட்கிறேன்

பெண்: சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை
மெல்லத்தான் பேசிடுமோ

ஆண்: தத்தி தத்தி தாவி நம் பிள்ளை
நெஞ்சில்தான் ஆடிடுமோ

பெண்: பிள்ளை ஒன்று இல்லையென்றால்
சொல்லும் உன்னால் மாறும்

ஆண்: தந்தை நெஞ்சின் ஆசைகளும்
பிள்ளை உன்னால் தீரும்
உன்னைக் காண கண்கள் ஏங்குது

பெண்: தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே....

பெண்: தங்கப் பாப்பா சந்தம் பாடும்

ஆண்: தந்தை நெஞ்சம் தாளம் போடும்.....

A little space to find your voice.

About Thanga Pappa Sandham Duet

Thanga Pappa Sandham Duet is a song from Thanga Pappa (1993). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Aravind Raj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer