Yengay Yengay Song Lyrics

Aasal·2010

Aasal movie poster
Movie
Aasal
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடலில்
மிருகம் இங்கே...
இங்கே...இங்கே...

ஆண்: ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே...
இங்கே...இங்கே...

ஆண்: வலிகளால்
வந்த வரங்களா
வாழ்க்கையில்
ஞானம் கொண்டேன்

குழு: ஓ ஹோ ஹோ

ஆண்: காதல் என்றால்
கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம்
வெள்ளை ரத்தம்

ஆண்: உறவும் நட்பும்

குழு: ஹோ ஹோ ஓ

ஆண்: பிம்பம் பிம்பம்

குழு: ஹோ ஹோ ஓ

ஆண்: உள்ளம் எங்கே
நம்பும் நம்பும்

ஆண்: பொய்களின்
கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஜனனம் உண்மை
மரணம் உண்மை
தந்தானே
கடவுள் தந்தானே

ஆண்: அந்த ரெண்டை தவிர
எல்லாம் பொய்யாய்
செய்தானே
மனிதன் செய்தானே

குழு: யோ யோ யோ யோ......

ஆண்: கடுகை பிளந்து
காணும் போது
வானம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து
காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்

ஆண்: என் உடலைத் தொட்டால்
நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்
நான் கடவுள் ஆனேன்

குழு: ஆ....ஆஅ....ஹா....ஆஅ...ஆஅ.....
ஆ....ஆஅ...ஹா....ஆஅ...ஆஅ.....

ஆண்: இங்கே இங்கே
மனிதன் இங்கே
இமயம் தாண்டும்
இதயம் இங்கே
காடும் மரமும்
என் காலில் பூக்கள்
குன்றும் மலையும்
கூழாங்கற்கள்

ஆண்: சாம்பலில்
உயிர்க்கும் பறவை போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்

A little space to find your voice.

About Yengay Yengay

Yengay Yengay is a song from Aasal (2010). Performed by S.P. Balasubrahmanyam. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer