Aattam Pottu Song Lyrics

Vetrivel·2016

Vetrivel movie poster
Singer
Saicharan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே

ஆண்: ஹே ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே

ஆண்: அட யாருது யாருது
வானம் அட போகுது போகுது
மேகம் அத பட்டா போட
முடியாதுடா

ஆண்: உன் போக்குல
போக்குல ஓடு உன் தேடல
தேடல சேரு என்ன நடக்குமோ
அது நடக்கட்டும் அத அப்பப்ப
பாத்துக்கலாம்

ஆண்: ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே

ஆண்: பொழுதோடு பொழுதாக
உன் வாழ்க்கைய நீ தேடு
சிறு புல்லும் சிகரம்தான்
சித்தெறும்பே நீ கேளு

ஆண்: மேகத்தப் போல
நிகழ்காலம் அது ஓடிப்போகுமே
வானத்தப்போல எதிா்காலம்
தெளிவாகத் தோன்றுமே

ஆண்: என்னடா வாழ்க்கை
என்று நீயுமே ஏங்கக்கூடாது
கண்முன்னே காலம்
காலி ஆகுமே தூங்கக்கூடாது

ஆண்: ஒரு ஆமை தன்
ஓட்டில் அட பிச்சை வாங்காதே

ஆண்: ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே

ஆண்: ஒருபோதும் தளராதே
உன் நம்பிக்கை தோற்காது
தினந்தோறும் இரை தேட
எந்த பறவையும் சலிக்காது

ஆண்: விரல்களை மூடும்
சுருக்கம்தான் கைரேகை என்பது
அதைவிட வாடா நம் கையில்
நம் வோ்வை உள்ளது

ஆண்: வாழ்க்கையோ
போகப் போகத் தானடா
பாடம் சொல்லுது வாலிபம்
தேயும் முன்னே ஓடடா
பாதை உள்ளது

ஆண்: போராட்டம் இல்லாமல்
இங்கு எதுவும் கிடையாதே

ஆண்: ஆட்டம் போட்டு
ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே
ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க
காலம் சிக்காதே

A little space to find your voice.

About Aattam Pottu

Aattam Pottu is a song from Vetrivel (2016). Performed by Saicharan. Music by D. Imman. Lyrics by Mohan Rajan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer