Kanne Kanmaniye Song Lyrics

Devi Sri Karumari Amman·1974

A continuous glide, at your pace.
Text size

பெண்: பழுதுள்ள வைரத்தைப் பறித்தவளே
எனக்கு வந்த பழியை அணியாய் தரித்தவளே
திருவுளச் சீட்டு எழுதிடும்
கோல் முனையை முறித்தவளே
என் குலம் வாழ பேரருளை வாரி இறைத்தவளே....ஏ....

பெண்: கண்ணே கண்மணியே கருமாரி
கண்ணே கண்மணியே கருமாரி
என் கண்களிலே பதிந்த சுகுமாரி
கண்ணே கண்மணியே கருமாரி
என் கண்களிலே பதிந்த சுகுமாரி

பெண்: பொன்னே பொன்னணியே உருமாரி
மலர் புன்னகை சிந்துகின்ற என் குமரி....
பொன்னே பொன்னணியே உருமாரி
மலர் புன்னகை சிந்துகின்ற என் குமரி....

பெண்: தாயாய் நினைப்பவர்க்கு தாயம்மா
ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.....
தாயாய் நினைப்பவர்க்கு தாயம்மா
உன்னை சேயாய் நினைப்பவர்க்கு சேயம்மா
காயாய் நினைப்பவர்க்கு காயம்மா
காயாய் நினைப்பவர்க்கு காயம்மா
உன்னை கனியாய் நினைப்பவர்க்கு கனியம்மா
கனியம்மா கனியம்மா

பெண்: நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழுதம்மா
நீ நிகழ்த்திய செயல் கண்டு மகிழுதம்மா
நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழுதம்மா
நீ நிகழ்த்திய செயல் கண்டு மகிழுதம்மா
உணர்ந்து உணர்ந்து உள்ளம் உருகுதம்மா
உணர்ந்து உணர்ந்து உள்ளம் உருகுதம்மா
என் உள்ளத்தில் சுகவெள்ளம் பெருகுதம்மா..
உள்ளத்தில் சுகவெள்ளம் பெருகுதம்மா......அம்மா....

பெண்: கனியும் அருள் பொழியும் கன்னியம்மா
ஒரு கணவன் இருந்தும் நீ கன்னியம்மா
கனியும் அருள் பொழியும் கன்னியம்மா
ஒரு கணவன் இருந்தும் நீ கன்னியம்மா

பெண்: தணிகை குமரனோடு ஐங்கரனை ஈன்ற
தாயான போதும் நீ குமரியம்மா
அருந்தாயான போதும் நீ குமரியம்மா குமரியம்மா

பெண்: வேப்பிலை காப்பணிந்த வீரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்த
மாரியம்மா கருமாரியம்மா
வேப்பிலை காப்பணிந்த வீரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்த
மாரியம்மா கருமாரியம்மா

பெண்: நீ வெள்ளி மலையாண்டி பாரியம்மா
நீ வெள்ளி மலையாண்டி பாரியம்மா
அன்பர் வேண்டும் வரமருள்வாய் வாரியம்மா
அன்பர் வேண்டும் வரமருள்வாய் வாரியம்மா
கருமாரியம்மா.......கருமாரியம்மா........

A little space to find your voice.

About Kanne Kanmaniye

Kanne Kanmaniye is a song from Devi Sri Karumari Amman (1974). Performed by S. Varalakshmi. Music by Sankar Ganesh. Lyrics by Poovai Sengkuttuvan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer