Ammave Deivam Song Lyrics

Amma·1982

Amma movie poster
Movie
Amma
Singer
P. Susheela
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பிள்ளை காணாமல் இங்கு வாடும் பூமாலை
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை

பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்

குழு: ...............................

பெண்: வேதனை வழக்கு விழிகளில் இருட்டு
திரியினைத் தேடுது விளக்கு
பால் முகம் நினைந்து மேலுடை நனைந்து
கிளி தவிக்கும் சிறையிருந்து
வெயிலை சுமப்பாள் நிழல் கொடுத்து

பெண்: அந்த ஆராரோ மறந்து
மனம் போராடும் நினைந்து

பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்

பெண்: தாய்மையின் தவிப்பால்
குழந்தையை எடுப்பாள்
பூக்களினால் முகம் துடைப்பாள்
சேலையின் தலைப்பால் காற்றினைத் தடுப்பாள்
காயம் படும் என நினைப்பாள்
துரும்பு விழுந்தால் முகம் சிவப்பாள்

பெண்: அவள் தன் மேனி கொடுப்பாள்
தன் கண்ணீரில் இனிப்பாள்

பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்

பெண்: தாய் விழி அழுதால் சூரியன் அழுமே
பாறைகளும் கசிந்திடுமே
பாலோடு அன்னை பசியோடு பிள்ளை
சோகங்களே அவள் வரமே
வெயிலில் வதங்கும் மலர் சரமே

பெண்: அந்த ஆகாயம் சிறிது
அவள் தியாகங்கள் பெரிது......

பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
பிள்ளை காணாமல் இங்கு வாடும் பூமாலை
சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை

பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம்
தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்

A little space to find your voice.

About Ammave Deivam

Ammave Deivam is a song from Amma (1982). Performed by P. Susheela. Music by Sankar Ganesh. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer