Paalile Vennai Song Lyrics

Devi Sri Karumari Amman·1974

Devi Sri Karumari Amman movie poster
Singer
L. R. Eswari and Vani Jairam
A continuous glide, at your pace.
Text size

பெண்: பாலிலே வெண்ணெய் உண்டு
பார்க்கும்போது தெரியுமா
பார் முழுதும் சக்தி உண்டு
பாவிக் கண்ணில் புரியுமா...

பெண்: பாலிலே வெண்ணெய் உண்டு
பார்க்கும்போது தெரியுமா
பார் முழுதும் சக்தி உண்டு
பாவிக் கண்ணில் புரியுமா...

பெண்: நேரிலே சக்தி தன்னை
நீயும் காட்ட முடியுமா......முடியுமா
நேரிலே சக்தி தன்னை
நீயும் காட்ட முடியுமா
என் நெஞ்சிலே அவளை வைத்தேன்
நிறைத்து நிற்கும் உருவமாய்....

பெண்: சக்தியாம் அம்மனுக்கு
தத்துவங்கள் நூறடி
சக்தியாம் அம்மனுக்கு
தத்துவங்கள் நூறடி
அந்த தத்துவத்தை உணர்ந்து கொள்ள
சக்தி உனக்கு ஏதடி

பெண்: நாளைக்கு நடப்பதெல்லாம்
நானறிவேன் கேளடி
நாளைக்கு நடப்பதெல்லாம்
நானறிவேன் கேளடி
என் நாவிலே வருவதெல்லாம்
நடக்க வைப்பேன் நானடி

பெண்: அம்மனின் பெயரைச் சொல்லி
ஆள் விழுங்கும் பெண்ணடி
அம்மனின் பெயரைச் சொல்லி
ஆள் விழுங்கும் பெண்ணடி
அந்த அம்மனே நேரில் வந்தால்
அடங்கி போகும் சங்கதி

பெண்: ஆத்தா என் மாரியம்மா
ஆடுகின்றாள் என்னிடம்
ஆத்தா என் மாரியம்மா
ஆடுகின்றாள் என்னிடம்
நீ பார்த்தால் போல் பேசுகின்றாய்
பக்தியில்லை உன்னிடம்
பக்தியில்லை உன்னிடம்

பெண்: மாரியையே ஆட்டுவது
மந்திரக் கோலா
மாரியையே ஆட்டுவது
மந்திரக் கோலா
அந்த மந்திரத்தை உன்னிடத்திலே
சொல்லி தந்தாளா

பெண்: காரியத்தை நானறிவேன்
ஆயிரம் நாளா
காரியத்தை நானறிவேன்
ஆயிரம் நாளா
அதன் காரணத்தை கேட்க
உன்னை அனுப்பி வைத்தாளா

பெண்: மண்ணில் உள்ளாள் சக்தி.....

பெண்: என் மனதில் உண்டு பக்தி

பெண்: மண்ணில் உள்ளாள் சக்தி.....

பெண்: என் மனதில் உண்டு பக்தி

பெண்: கண்ணில் உள்ளாள் சக்தி.......

பெண்: என் கருத்தில் உண்டு பக்தி

பெண்: கண்ணில் உள்ளாள் சக்தி.......

பெண்: என் கருத்தில் உண்டு பக்தி

பெண்: விளங்கவில்லை உனக்கு........

பெண்: அவள் வேண்டியவள் எனக்கு

பெண்: கண்டதுண்டோ அவளை..........

பெண்: என் கண்ணில் உள்ளாள் அவளே

பெண்: அண்டமாகி அகிலமாகி
அமர்ந்திருக்கும் அம்மனை நீ
கண்டாதாக கூறுகின்ற
காரிகை உன் கற்பனை

பெண்: ஆதியாகி அந்தமாகி
ஆளுகின்ற சக்தியை
நாதியாய நாதியாகி
நாடு காக்கும் தேவியை

பெண்: சோதிடத்தில் ஆட விட்டு
சோதனை செய்தாயடி
யாரிடத்தில் ஆருடத்தை
ஆட வந்தாய் பாரடி.......

A little space to find your voice.

About Paalile Vennai

Paalile Vennai is a song from Devi Sri Karumari Amman (1974). Performed by L. R. Eswari, Vani Jairam. Music by Sankar Ganesh. Lyrics by A. Maruthakasi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer