Karumathur Kaatukule Song Lyrics

Virumaandi·2004

Virumaandi movie poster
Singer
Mary, Periya Karuppu Thevar, Sukumar and Thiruvudiyan
A continuous glide, at your pace.
Text size

சுகுமார் மற்றும் திருவுடியன்

குழு: ........................

ஆண்: கருமாத்தூர் காட்டுக்குள்ளே
ஒரு காலத்தில் காளியம்மன்
போல வந்தாள் பேச்சியம்மா

குழு: கருமாத்தூர் காட்டுக்குள்ளே
ஒரு காலத்தில் காளியம்மன்
போல வந்தாள் பேச்சியம்மா

குழு: சைவ சமையல் படையல் வச்சு
சருவ சட்டியில் பொங்கல் வப்பா
சாமிக்கெல்லாம் பூசை வப்பா
சங்கெடுத்து ஊதி நிற்பா

குழு: கருமாத்தூர் காட்டுக்குள்ளே
ஒரு காலத்தில் காளியம்மன்
போல வந்தாள் பேச்சியம்மா

ஆண்: சங்கு சத்தம் அந்த
போர்க்களத்தில் உள்ள
பேய் காமன் காதில் கேட்டது

குழு: கேட்டது கேட்டது

ஆண்: பொங்கலோடு பழங்களும்
சைவ படையல் வச்சு
சாமிக்கு யார் அங்கு படைப்பது

குழு: படைப்பது படைப்பது

ஆண்: சைவ வாடை அது
கொஞ்சமும் சகிக்கவில்லை
தாக்கி முகம் சுளிக்க வைக்குது

குழு: எங்கள் செங்கண் துடி துடிக்க
அங்கம் பட படக்க
பொங்கினானே பேய் காமனே

ஆண்: மாட்டு குடல் எடுத்து
மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்கு
அவன் வந்தானே

குழு: மாட்டு குடல் எடுத்து
மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்கு
அவன் வந்தானே

ஆண்: நான் ஆளும் பகுதியிலே
என்னென்னமோ சத்தம் தான்
நீ எழுப்பும் சத்தம் எல்லாம்
குத்தம் தான்

ஆண்: சத்தத்தாலே
நேத்து பூரா தூங்கல
உங்க சங்கு சத்தம்
கொட்டு சத்தம் தாங்கல

ஆண்: ஏழு நாளில்
இங்கிருந்து கிளம்பனும்
அட இல்லாவிட்டா
நீங்களெல்லாம் பொலம்பனும்
அச்சமூட்டி எல்லாரையும்
மிரட்டுனான் பொருளை அடிச்சு
நொறுக்கி ஆவேசமா விரட்டுனான்

குழு: {விரட்டுனான் அய்யய்யயோ
விரட்டுனான்} (2)

ஆண்: அண்ண கொடிச்சி
அழகு மயில் பேச்சியம்மா
தன்னந் தனியே வாடுறவ
கண்ணான கழுவநாதன் கண்டு
மனம் கலங்கி நின்னு

குழு: ம்ம்ம்

ஆண்: அவன் உள்ளங்கை ரேகைய
ஊடுருவி பார்த்துட்டான்

குழு: ஓஹோ..
புறங்கை ரேகைய
புரட்டி புரட்டி பார்த்துட்டான்
ஆஹா

ஆண்: உன்னை காப்பாத்த ஒரே ஒரு
ஆள விட்ட உலகத்திலே
யாரும் இல்லை

குழு: ஆமா

ஆண்: ஒட்டி நிற்கும் துன்பம்
எல்லாம் ஒட்டடையா
ஓட்டிடுவான் ஒருத்தனாக

குழு: ஆமா

ஆண்: அனாதைக்கு ஆதரவு
தருவாண்டி அவன் பேரு நான்
சொன்னேன் விருமாண்டி

குழு: ஆ.....

பெண்: விருமாண்டிய வேண்டி
வரத்தான் அங்க பேச்சியம்மா
புறப்பட்டாலே கனாந்தரம் காடு
கடந்து அந்த வண்ணயில்
புறப்பட்டாளே

பெண்: எறும்பேற முடியாத
எட்டு சுத்து கோட்டைக்குள்ள
பாம்பேற முடியாதே
பத்து சுத்து கோட்டைக்குள்ளே

பெண் & குழு: ஆள் அரவம் இல்லாத
ஆறாம் பேய் கோட்டைக்குள்ளே
அண்ணனையும் சந்திக்க
அழகி அவள் போனாளே

ஆண்: ஒஹோ வெவரம்
கேட்டு விருமாண்டி
வீரம் பொங்கி கொண்டு எழுந்தானே
கன்னி பொண்ணு கதை கேட்டு
கண்ணு செவந்திட எழுந்தானே

ஆண்: பெத்த புள்ள துயரம் கேட்டு
பெத்தவங்க துடிப்பது போல்
பெரும் புழுதி புயல் அடிக்க
பேய் காமன் இருக்குமிடம்

ஆண்: பெரும் அண்டம் கிடு கிடுக்க
விருமாண்டி வந்தானே

குழு: வந்தானே வந்தானே
வந்தானே

ஆண்: வெண் பொங்கல்
தேங்காய் பழம் விபூதி
அதை வெறுப்பதென்ன
அர்த்தம் கேட்ட கபோதி

ஆண்: இது பேச்சியம்மா
குடியிருக்கும் கடலுடா
எதிர்த்து பேசினாக்கா
கிழிஞ்சு போகும் குடலுடா

ஆண்: மாட்டு குடலில்
மாலை போடும் பராரி
உன் முதுகில் ஏறி
செய்ய போறேன் சவாரி

குழு: சவாரி சவாரி சவாரி....

ஆண்: இப்படி விருமாண்டி
சொன்னதும் ரெண்டு பேருக்கும்
கடுமையா சண்டை நடந்துச்சு
அப்போ பூமியெல்லாம் நடுங்குச்சு
மலை எல்லாம் ஒடஞ்சிச்சு
இதை பார்த்த சிலபேரு வீணா
எதுக்கய்யா சண்டை போடுறீங்க
சமாதானமா பேசி
தீர்த்துக்கலாம் அப்டினாங்க
அவங்களும் அதுக்கு சம்மதிச்சாங்க
அப்றம் பஞ்சாயத்தார்
தீர்ப்பு சொன்னாங்க
தொட்டப்ப நாயக்கனூர்லயும்
மதுரை மொட்டை கோபுரத்து
பக்கத்துலயும் கொடி ஒன்னு நட்டு
வைப்போம் உங்க ரெண்டு பேருல
யாரு கொடிய முதல தூக்கிட்டு
வராகளோ அவங்களுக்கு
அந்த எல்லை சொந்தம்னு
பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல
பேய்க்காமன் யோசிச்சான்
யோசிச்சு சதி ஒன்னு பண்ணுனான்
விருமாண்டி கையில நொண்டி
குதிர ஒன்னு குடுத்து
அவன் போனா எங்கடா கொடி
தூக்கிட்டு வரபோறான் நெனச்சான்...
ஆகான்

ஆண்: மொட்டை கோபுரத்துக்கு
புறப்பட்டான் பேய் காமனும்
தொட்டப்ப நாயக்கனூர
தொட்டுட விருமான் போனான்

குழு: மொட்டை கோபுரத்துக்கு
புறப்பட்டான் பேய் காமனும்
தொட்டப்ப நாயக்கனூர
தொட்டுட விருமன் போனான்

ஆண்: ஏய்க்க நெனைச்சா அந்த
பேய்க்காமன் எல்லையையும்
சேர்த்தே அளந்து வந்து
ஜெயிச்சானே விருமாண்டியும்

குழு: ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்

பெண்: அண்ணன் திரும்பி போன
இங்கே இவன் சும்மா இருப்பானா
பொண்ணுக்கு தொல்லை கொடுக்கும்
எவனும் இங்க நல்ல இருப்பானா

பெண்: என்ன நானும் செய்ய
போறேன் எனக்கு ஒன்னும்
தெரியவில்லயே
அட அண்ணன்காரன் விருமன் போன
வேறும் ஏதும் வழியும் இல்லயே

ஆண்: அதனால என்ன பண்றதுனு
யோசிச்சு ஒரு தந்திரம்
பண்ணுனா பேச்சியம்மா

குழு: என்ன செஞ்சா

ஆண்: தான் விரல்ல போட்டுருந்த
மோதிரத்த கிணத்துக்குள்ள
போட்டுட்டு அண்ணன் அண்ணன்
மோதிரம் விழுந்திருச்சு எடுத்து
குடுங்க சொன்ன தங்கச்சி
வேண்டுதல நிறைவேத்த
தங்கச்சிக்காக கிணத்துக்குள்ள
குதிச்சி அந்த மோதிரத்த
எடுக்கையில கிணத்து மேலருந்த
கல்ல வெச்சு மூடி பேச்சியம்மா
விருமாண்டிய கிணத்துக்குள்ளயே
சிறை வெச்சுபுட்டா என்ன தங்கச்சி
உனக்கு உதவி பண்ண வந்த எனக்கு
இது தான்நீ காட்ற நன்றியா-னு
விருமாண்டி கேட்க
பேச்சியம்மா யோசிச்சு
தினம் தினம் அண்ணனுக்கு பூஜ
பண்ண சூலிபொண்ணும் சூலிமாடும்
கொடுக்க நம்மளால முடியுமா
கொடுத்த இந்த ஊரும் உலகும்
தான் தாங்குமா அப்டினு நெனச்சி
அண்ணன் கிட்ட சொன்னா
நீ கேட்ட மாதிரி உனக்கு
பூஜ பண்ண முடியாது
ஆனா உனக்கு நாஙக
என்ன பண்ணுவோம்னா

ஆண்: ஆடி கடைசி வெள்ளி
உனக்கு ஒரு பூச வைப்போம்
ஆகாச பூச வெச்சு
அப்போ படையல் வைப்போம்

குழு: ஆடி கடைசி வெள்ளி
உனக்கு ஒரு பூச வைப்போம்
ஆகாச பூச வெச்சு
அப்போ படையல் வைப்போம்

ஆண்: அடியேன் நீ கேட்டதெல்லாம்

குழு: ஆமாமாம் செஞ்சு வைப்போம்

ஆண்: அதுக்காக எங்களையே
எப்போதும் காத்திருந்து
இங்கே நீ இருக்க வேணும்
எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்

குழு: சுவாமி இங்கே நீ இருக்க
வேணும் எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்

ஆண்: அதுக்காக எங்களையே
எப்போதும் காத்திருந்து
இங்கே நீ இருக்க வேணும்
எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்

குழு: சுவாமி இங்கே நீ இருக்க
வேணும் எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்

A little space to find your voice.

About Karumathur Kaatukule

Karumathur Kaatukule is a song from Virumaandi (2004). Performed by Mary, Periya Karuppu Thevar, Sukumar, Thiruvudiyan. Music by Ilaiyaraaja. Lyrics by Kamal Haasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer