Nadhi Enge Song Lyrics

Uyirodu Uyiraga·1998

Uyirodu Uyiraga movie poster
Singer
Ghansham Vasvani
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்கு தெரியும்

ஆண்: அதை அறிந்து சொல்லவும்
மதி இல்லை
மதி இருந்தால்
அதன் பேர் விதி இல்லை

ஆண்: நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்

ஆண்: விரும்பி யாரும்
பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம்
கிடைப்பதுமில்லை

ஆண்: புளிக்கும் வாழ்க்கை
அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில்
சந்தோஷம் இல்லை

ஆண்: எட்டு நாள் வாழும்
பட்டாம்பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது
ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம்
வாழவும் இல்லை

குழு: நாளை என்பதை
விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து

ஆண்: புன்னகை அணிந்து
போரை நடத்து

குழு: ...........................................

ஆண்: கனவு காண்பது
கண்களின் உரிமை
கனவு கலைப்பது
காலத்தின் உரிமை

ஆண்: சிதைந்த கனவை
சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல்
அவரவர் திறமை

ஆண்: ஒவ்வொரு நொடியிலும்
உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
நிறைந்த வாழ்வும்
நிலைத்திருந்தால்
வந்தது நிறைவது
வாழ்வின் கடமை

குழு: நாளை என்பதை
விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து

ஆண்: புன்னகை அணிந்து
போரை நடத்து

A little space to find your voice.

About Nadhi Enge

Nadhi Enge is a song from Uyirodu Uyiraga (1998). Performed by Ghansham Vasvani. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer