Nee Kaatru Naan Maram Song Lyrics

Nilaave Vaa·1998

Nilaave Vaa movie poster
Singer
Hariharan and K.S. Chithra
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன் } (2)

ஆண்: நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்

ஆண்: நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

பெண்: ...........................

பெண்: நீ அலை
நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

ஆண்: நீ உடல் நான்
நிழல் நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்

பெண்: நீ கிளை நான்
இலை உன்னை ஒட்டும்
வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

ஆண்: நீ விழி நான்
இமை உன்னை சேரும்
வரைக்கும் நான் துடித்து
இருப்பேன்

பெண்: நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்

ஆண்: நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண்: ...........................

ஆண்: நீ வானம் நான்
நீலம் உன்னில் நானாய்
கலந்திருப்பேன்

பெண்: நீ எண்ணம்
நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்

ஆண்: நீ வெயில்
நான் குயில் உன்
வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்

பெண்: நீ உடை நான்
இடை உன்னை உறங்கும்
பொழுதும் நான் உடுத்திருப்பேன்

ஆண்: நீ பகல் நான்
ஒளி என்றும் உன்னை
மட்டும் சார்ந்தே நான்
இருப்பேன்

பெண்: நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

ஆண்: நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்

பெண்: நீ இரவு நான்
விண்மீன் நீ இருக்கும்
வரை தான் நான் இருப்பேன்

ஆண்: நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன்

A little space to find your voice.

About Nee Kaatru Naan Maram

Nee Kaatru Naan Maram is a song from Nilaave Vaa (1998). Performed by Hariharan, K. S. Chithra. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer