Adi Aathi Song Lyrics

Pasumpon·1995

Singer
K. S. Chithra, Sujatha Mohan and Jayachandran
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ....
ஆஅ.....ஆஆ.....ஆஅ.....
ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ....
ஆஅ.....ஆஆ.....ஆஅ.....

பெண்: அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

பெண்: மாமன் சொன்ன ஒத்த சொல்லு
மார்புக்குள்ளே இனிக்குதோ
மல்லு வேட்டி கட்டிக் கொள்ள
மல்லியப் பூ நெனைக்குதோ
உள்ளுக்குள்ளே ஆசை வந்து
உச்சு கொட்டி நிக்குதோ

பெண்: அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்.......(8)

பெண்: ஆஆ.....ஆஅ....தன னா னா
நன நன னா ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....

பெண்: மஞ்சத் தண்ணி ஊத்தும் போதே
மாமன் பேரச் சொன்னவ தானே
ஒனக்கு சமஞ்சவ நான்தானே

ஆண்: வண்டி தடத்து பள்ளம் பாத்து
வந்து ஓடும் வெள்ளம் போல
ஒனக்கு அமஞ்சவன் நான்தானே

பெண்: ஏக்கம் பூவுக்கே
வண்டு வாராதா

ஆண்: நீ தாழம் பூவாச்சே
தேனீ தேடாதா

பெண்: உன் தோளில் துண்டாக
நான் ஆடணும் செண்டாக

ஆண்: அடி சொல்லடி மெதுவாக
சுத்தி யாரும் கேக்கப் போறாக

பெண்: அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

குழு: ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே
ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே

ஆண்: ஊத்து மேட்டில் பாட்டுக் கேக்க
ஓடி வந்து ஊரே பாக்க
உனக்கு ஏனடி பொல்லாப்பு

பெண்: வரப்ப மறச்ச நெல்லும் உண்டு
வயல மறைக்க புல்லும் உண்டு
மனசுக்கேதையா மாராப்பு

ஆண்: வேளை வந்தாச்சு
மாலை நான் போட

பெண்: தாலி கட்டாமல்
வாழ்ந்தேன் உன் கூட

ஆண்: தாலி நான் போட
அடி தாப்பா நீ போட

பெண்: விடிஞ்சு பாத்தாக்க
உன் வேட்டியும் சட்டையும் என்னோட

பெண்: அடி ஆத்தி
நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ
அடி ஆத்தி
கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

பெண்: மாமன் சொன்ன ஒத்த சொல்லு
மார்புக்குள்ளே இனிக்குதோ
மல்லு வேட்டி கட்டிக் கொள்ள
மல்லியப் பூ நெனைக்குதோ
உள்ளுக்குள்ளே ஆசை வந்து
உச்சு கொட்டி நிக்குதோ

A little space to find your voice.

About Adi Aathi

Adi Aathi is a song from Pasumpon (1995). Performed by K. S. Chithra, Sujatha Mohan, Jayachandran. Music by Vidyasagar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer