Thenpandi Cheemai Song Lyrics

Nadodi Pattukkaran·1992

Nadodi Pattukkaran movie poster
Singer
Ilayaraja
Lyricist
Parinaman
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே...
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே...ஏ

ஆண்: தாலட்டுப் பாட்டில்
தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன்
ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்

ஆண்: தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே...
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே...ஏ...

ஆண்: கண்ணுபடும் பிள்ளைக்கென்றே
காலடியில் மண்ணெடுப்பாள்
கால் முளைத்தே ஓடி விட்டால்
கண் விழித்தே தாய் துடிப்பாள்

ஆண்: பள்ளிக்கு போகாத பாவியவள்
உள்ளத்தில் நேர்மையில் யோகியவள்
சாமிக்கும் காணிக்கை போட்டு வைப்பாள்
தன் பிள்ளைக்கே வரம் கேட்டு வைப்பாள்

ஆண்: நான் வாழத்தானே
தான் வாழ்ந்த பேதை
ஆனாலும் மேதை அவள்தானோ
அன்பான அன்னை இவள்தான்

ஆண்: தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே...
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே...ஏ...

ஆண்: என் முகத்தில் தன் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்திருப்பாள்
பிள்ளைக்கொரு துன்பம் வந்தால்
உள் மனசில் வேர்த்திருப்பாள்

ஆண்: வைரத்தில் மூக்குத்தி கேட்டதில்லை
மானத்தில் தாய் என்றும் ஏழையில்லை
மார்மீதும் பிள்ளைக்கு ஏணி தந்தாள்
வானத்தை நான் தொட ஆசைப்பட்டாள்

ஆண்: பாசத்துக்காக ரோசத்தைக்
கூட பாராட்ட மாட்டாள்
அன்னை தான் ஹோ நான்
பார்த்த தெய்வம் இவள்தானோ

ஆண்: தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே...
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே...ஏ...

ஆண்: தாலட்டுப் பாட்டில்
தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன்
ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்

ஆண்: தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே...
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே...ஏ...

A little space to find your voice.

About Thenpandi Cheemai

Thenpandi Cheemai is a song from Nadodi Pattukkaran (1992). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Parinaman.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer