Aavarampoo Azhage Song Lyrics

Tamizh Ponnu·1992

Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே....

ஆண்: ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே
ஒருநாளும் மச்சான் பேச்சு மாறாது
ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது

ஆண்: இது எல்லாமே விளையாட்டு
போனது போகட்டும் பூங்கொடி தலையாட்டு

ஆண்: ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே....

ஆண்: ஆளான காலந்தொட்டு
அழகான காலத் தொட்டு
கண்ணுக்குள்ள ஒத்திக் கொள்ள
காலம் வரலையா

ஆண்: மடிமேலே அள்ளி வச்சு
மாராப்ப தள்ளி வச்சி
நெத்திப் பொட்ட மாத்திக் கொள்ள
நேரம் வரலையா

ஆண்: அடிக் கிளியே...ஓஓ.....ஓஓ....ஓஓ...ஓ.....ஓஹ்..
அடிக் கிளியே கிளி கடிக்கும் கனியே
கனியிருக்கும் கொடியே நீ கிட்ட வாயேன்டி
நான் ஓடம் நீ வந்தால் உசுருக்கு ஒலை வச்சு
ஒரு கணம் சிரிக்கிறியே

ஆண்: ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே....

பெண்: ..........................

பெண்: மச்சான் உன் பேரச் சொல்லி
மருதாணி போட்டுக்கிட்டா
வெக்கத்துல இன்னும் கொஞ்சம்
செவக்குதய்யா

பெண்: நானிருக்கும் நெஞ்சுக்குள்ளே
வேறொருத்தி எட்டி பாத்தா
கன்னிப் பொண்ணு நெஞ்சு கொஞ்சம்
துடிக்குதய்யா

பெண்: உன்ன நெனச்சு...ஆஆ.....ஆஆ....ஆ...ஆஹ்...
உன்ன நெனச்சு நான் ரெண்டு கண்ணும் முழிச்சு
உன்னக் கண்டு மனம் தவிச்சு
நான் பூத்துக் கிடக்கேன்
நீ பாராம போனாலும்
பூசணி பூவா வாசலில் நானிருப்பேன்

பெண்: ஆவாரம் பூ அழகு
ஆளான தேர் அழகு
பூவாரம் போல் அழகு
ஆதாரம் என் அழகு
ஒருநாளும் கன்னி பேச்சு மாறாது
ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது

பெண்: நான் மாராப்பு போட்டாலும்
மனசுக்குள் இருப்பதை
மறைக்கவும் முடியலையே

பெண்: ஆவாரம் பூ அழகு
ஆளான தேர் அழகு
பூவாரம் போல் அழகு
ஆதாரம் என் அழகு.....

A little space to find your voice.

About Aavarampoo Azhage

Aavarampoo Azhage is a song from Tamizh Ponnu (1992). Performed by K. S. Chitra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer