Allola Kallolam Song Lyrics

Plan Panni Pannanum·2020

Singer
Ramya Nambeesan
A continuous glide, at your pace.
Text size

பெண்: அல்லோல கல்லோலா.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
அல்லோல கல்லோலா.....ஹா......ஆ.....ஆ.....

பெண்: அல்லோல கல்லோலம்
என்ன நினைச்சாலும்
அல்லோல கல்லோலம்
என்ன பண்ணினாலும்

பெண்: காதல் என்னும் பூதம்
வந்து விளையாட
நாலு பேரு பாதை
மாறி எங்கோ போக

பெண்: வாழ்க்க ஒரு கதையத்தான்
சிறப்பா எழுதுதே
முடிவென்ன.....எப்போதும் சொல்லாதே
ஏதோ ஒரு நம்பிக்கையில்
பயணம் தொடருதே
இலக்கு இல்லாம எதுக்கும் நில்லாம

பெண்: நேரத்தை பார்த்தாலே
அது பாரத்தை கூட்டாதா
வானத்தில் தன்னால
சின்ன வெளிச்சம் வராதா
கேள்விக்கு எல்லாமே
விடை சொல்லிட்டு போகாதா

பெண்: நண்பனோட துன்பம் எல்லாம்
தன்னுடைய துன்பம் என்று
எண்ணி எண்ணி மனசு ஒன்னு
தவிக்கிறதே
சொந்தம்கூட மறந்து விடும்
பந்தமெல்லாம் பறந்துவிடும்
நட்புக்குள்ள பிரிவெதுவும்
கிடையாதே.....

பெண்: பொண்ணுக்குள்ள மனசுண்டு
லட்சியமும் அதிலுண்டு
அதை உண்மை ஆக்கிடவே
ஆசை வராதா
இன்னொருத்தர் லட்சியத்தில்
கல்லெறிஞ்சு பார்க்குற
மோசமான பழக்கமும்
இங்கே ஓயாதா

பெண்: முள்ளு தொட்டாலும்
பூ காயத்தை பார்க்காது
வெற்றிக்கு முன்னாலே
பட்ட காயங்கள் நிக்காது
வேதனை வந்தாலும்
அது காணாம போயாச்சே
சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா

பெண்: சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா
சோகத்தின் பின்னாலே
ஒரு சந்தோசம் வராதா

A little space to find your voice.

About Allola Kallolam

Allola Kallolam is a song from Plan Panni Pannanum (2020). Performed by Ramya Nambeesan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Niranjan Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer