Asaivindri Song Lyrics

Paramporul·2022

Singer
Yuvan Shankar Raja and Shreya Ghoshal
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அசைவின்றி அசைவே இன்றி
உன் முன் நின்று கேட்கின்றேன்
இமைக்காமல் நீயும் என்னை
பார்த்தால் என் செய்வேன்?

ஆண்: எதன் மீது ஆசை ஏதும்
வேண்டாம் என்றாய் யோசித்தேன்
அதுகூட ஆசைதானே
ஐயோ என் செய்வேன்?

ஆண்: தலையின் பின்னே பின்னே
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா!
உந்தன் போதி நிழலின்
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா!

பெண்: அலை யேதும் இல்ல ஆழியிலே
நிலவாய் பிடுங்கி வீசாதே?
உன்னை காணா வேளையிலே
கண்ணால் பேசாதே

பெண்: அட நேற்று நாளை வீணென நீ
சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன்
என்னுள் என்னை வீழ் என்றாய்
உன்னுள் வீழ்கின்றேன்

பெண்: அழகின் மேலே இதயம் ஏறி
நழுவி கீழே வீழ
மெழுகின் மேலே தீயில் தோய்ந்த
காதல் வாளும் கீற

பெண்: திறக்கின்ற கண்ணுக்குள்ளே
தீயின் வெப்பம் பாய
உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சம்
கொஞ்சம் குளிர் காய

ஆண்: சிற்பம் யார்?
அட சிற்பி யார்?
எந்தன் கேள்வி சரிதானா?
தீயின் என்னை வாட்டுகிறாய்
சிலையே நான்தானா?

ஆண்: உலகே இங்கே தீப்பிழம்பாய்
உயிர் நான் வழிந்தேன் தீக்குழம்பாய்
இருகி போனேன் இரும்பாய்
நான் ஆனேனே புதிதாய்

ஆண்: அசைவின்றி அசைவே இன்றி
உன் முன் நின்று கேட்கின்றேன்
இமைக்காமல் நீயும் என்னை
பார்த்தால் என் செய்வேன்?

பெண்: தலையின் பின்னே பின்னே
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தா!
உந்தன் போதி நிழலின்
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தா!

பெண்: அலை யேதும் இல்லா ஆழியிலே
நிலை பிடுங்கி வீசாதே!
உன்னை காணா வேளையிலே
கண்ணால் பேசாதே

பெண்: அட நேற்று நாளை வீணென நீ
சொன்னாய் இன்றில் வாழ்கின்றேன்
என்னுள் என்னை வீழ் என்றாய்
உன்னுள் வீழ்கின்றேன்

A little space to find your voice.

About Asaivindri

Asaivindri is a song from Paramporul (2022). Performed by Yuvan Shankar Raja, Shreya Ghoshal. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer