Dhooramaai Song Lyrics

Peranbu·2018

Movie
Peranbu
Singer
Vijay Yesudas
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்று உயிரே
சூழ்நிலை மனநிலை மாற்றுத்தே
உடல் நிலை தேற்றுத்தே குற்று உயிரே...

ஆண்: திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்... தொடர்ந்து விடு....
சாலை காட்டில் தொலையலாம்
காலை ஊன்றி எட்டு வை
சாலை வந்து சேருவாய் ...

ஆண்: தூரமாய் சிறு ஒலி தோனுதே
சிறு குயில் கூவுதே சிற்று உயிரே

ஆண்: கொள்ளை அழகு தீராது
குருவி இங்கு சாகாது
வெள்ளை பூக்கள் வாடாது
வெயில் சூடு நேராது

ஆண்: இங்கே தோன்றும் சிறிய மலை
இயறக்கை தாயின் பெரிய முலை
பருகும் நீரில் பாலின் சுவை
பரிவோடு உறவாடு...

ஆண்: குழலோடு போன சிறு காற்று
இசையாக மாறி வெளியேறும்
உன் மீது மட்டும் மழை
கொட்டி மேகம் களைந்து ஓடுமே

ஆண்: பெரு துன்பம் பழகி போனாலே
சிறு துன்பம் ஏதும் நேராது
தண்ணீரில் வாழும் மீனுக்கு
ஏது குளிர்காலமே...

ஆண்: திசைகளை நீ மறந்து விடு
பயணங்களை ஒஹ்... தொடர்ந்து விடு....

ஆண்: பிறையும் மெல்ல நிலவு ஆகும்
குறையும் உந்தன் அழகு ஆகும்
வளையும் மாறி வயல் பாயும்
வரமே ஓடிவா...

ஆண்: சலவை செய்த பூங்காற்று
தாய் பால் போன்ற நீர் ஊற்று
சாரல் மொழியில் பாராட்டு
வேற என்ன வேண்டுமோ...

ஆண்: மொழியற்ற பூமி இதுவாகும்
முக பாவம் மொழியாகும்
மலர் பூத்த இதழில் நகைப்புத்து
என்னை மகிழ் ஊட்ட வா...

ஆண்: பனி மூட்டம் மூடி போனாலும்
நதி ஓட்டம் நின்று போகாது
விதி மூடும் வாழ்வு விடை
தேடி தேடி நடை போடா வா...

பெண்: ஹ்ம்ம்....ம்ம்ம்......

A little space to find your voice.

About Dhooramaai

Dhooramaai is a song from Peranbu (2018). Performed by Vijay Yesudas. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer