Vaanthooral Song Lyrics

Peranbu·2018

Movie
Peranbu
Singer
Sriram Parthasarathy
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண்: விதையை புரட்டி போட்டாலும்
விண்ணை பார்த்து தான் முளைக்கும்
பேர் அன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்

ஆண்: பருவம் கடந்து போனாலும்
அருகம்புல்லு சாகாது
ஓர் தூரலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்

ஆண்: வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

ஆண்: ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ... ஆ
நிரிசனி தனிப மகமப
நிரிசனி தனிப மகமப

ஆண்: எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார் வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை

ஆண்: மேகமற்ற வானத்தின் கீழே
தாகம்முற்ற பறவையை போலே
ஏதுமற்று பறந்த போதும்
நாடும் துணைகள்

ஆண்: ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்
பக்கம் தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்

ஆண்: வான்தூரல் என் தோள்கள்
மேலே வாலாட்டும் நாளே

ஆண்: மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லி தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ளபேர்க்கே
வாழ்க்கை என்றுமே இனிக்கும்

ஆண்: ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை
எங்கோ செல்லும் எறும்பு கூட
இரை கொடுக்கும்

ஆண்: மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை
புலன்களை கடந்து கூட
இன்பம் இருக்கும்

ஆண்: வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே

A little space to find your voice.

About Vaanthooral

Vaanthooral is a song from Peranbu (2018). Performed by Sriram Parthasarathy. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer