En Kanavinai Kel Nanba Song Lyrics

Desiya Geetham·1998

Desiya Geetham movie poster
Singer
Hariharan
Lyricist
Vasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் கனவினை கேள் நண்பா....

ஆண்: என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்

ஆண்: ஒரு புறம் வறுமையும்
மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா....

ஆண்: நண்பனே இது மாறவேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இளைஞர் கையில்
எங்கள் தேசம் மாறவேண்டும்

ஆண்: என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்

குழு: மகராசன் சீமையில
மழையில்லாம
இருந்ததொரு காலம்
அட காந்தி போல்
தலைவர் வந்ததனால்
நாடு இப்போ
செழிச்சு வளங்கொழிச்சு
பஞ்சம் பசி தீர்ந்ததடியோ
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா

ஆண்: பாட்டி பால் விற்ற
கணக்கை கம்பியூட்டர்
பதிய வேண்டும்
நாற்று நடுகின்ற பெண்ணும்
செல்போனில் பேச வேண்டும்

குழு: ஆம் செல்போனில்
பேச வேண்டும்

ஆண்: உழவன் ஏரோட்ட
பென்சு காரோட்டி
போக வேண்டும்

ஆண்: விளையும் பயிருக்கு
நாங்கள் சொல்கின்ற
விலைகள் வேண்டும்

குழு: நாங்கள் சொல்கின்ற
விலைகள் வேண்டும்

ஆண்: ஒலிம்பிக் கேமில்
சிலம்பம் ஆடி
ஜெயித்திட வேண்டும் வேண்டும்
வேற்று நாட்டோன்
நமது நாட்டில் வேலைக்கு
அலைய வேண்டும்
ஏழை நெஞ்சில்
கோடி ஆசைகள் செய்ததென்ன
உங்கள் அரசியல்

குழு: சுதந்திர வேள்வியை
நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட
இனியும் பயம் எதற்கு

ஆண்: தோழனே...
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்

ஆண்: ஆ ஆஅ ஹா… பட்டி தொட்டிக்கும்
பளிங்கு கல்லாலே ரோடு வேண்டும்
நடை பாதை மேல்
தூங்கும் ஏழைக்கும்
சொந்த வீடு வேண்டும்

குழு: ஏழைக்கும் சொந்த
வீடு வேண்டும்

ஆண்: இருக்கும் பல கட்சி மாறி
ஒரு கட்சியாக வேண்டும்
மக்கள் நம் மக்கள் என்ற
உணர்வுள்ள தலைவன் வேண்டும்

குழு: உண்மை உணர்வுள்ள
தலைவன் வேண்டும்

ஆண்: தேர்தல் கணையாய் இருக்கும்
மக்கள் வெடித்திட வேண்டும் வேண்டும்
உலக அரங்கில் நமது நாடு
முதல் இடம் வாங்க வேண்டும்
இந்தியாவின் இளைஞர் கூட்டமும்
இளைத்ததல்ல எந்த நாட்டுக்கும்

குழு: சுதந்திர வேள்வியை
நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட
இனியும் பயம் எதற்கு

ஆண்: தோழனே
என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்

ஆண்: ஒரு புறம் வறுமையும்
மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா

ஆண்: நண்பனே இது மாறவேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இளைஞர் கையில்
எங்கள் தேசம் மாறவேண்டும்

ஆண்: என் கனவினை கேள் நண்பா
உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால்
உதிரம் கொதிக்கும்
என் கனவினை கேள் நண்பா

A little space to find your voice.

About En Kanavinai Kel Nanba

En Kanavinai Kel Nanba is a song from Desiya Geetham (1998). Performed by Hariharan. Music by Ilaiyaraaja. Lyrics by Vasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer