Dhesiya Geetham Song Lyrics

Desiya Geetham·1998

Desiya Geetham movie poster
Singer
K. J. Yesudas
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓம் பாரத மாதா ஜனனி
வந்தே மாதரம்
ஓம் பாரத மாதா ஜனனி
வந்தே மாதரம்

ஆண்: ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா

குழு: ஹே
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

குழு: ஹே

ஆண்: காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்...
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்...

ஆண்: சுதந்திரமே
சோதனையா வேதனையா....

ஆண்: ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

குழு: ஓ ஓஹ்ஹோ ஓ.....

ஆண்: கண்ணீரும் பலர் செந்நீரும்
விடுதலை வாங்கிய தேசம்
வம்பாலும் வெடிகுன்டாலும்
ஆனது ஆனது நாசம்

ஆண்: சாதிகளால் மோதல்களால்
நூறாய் சிதறுவதோ
கவலைகளின் கருவறையில்
இனியும் உறங்குவதோ

ஆண்: மதமெனும் பேய்களின் நீதி
உயிர் குடிக்குது உங்களின் நீதி
சத்தியம் பிழைத்திட
சத்திய சோதனை நடக்குமோ

குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆண்: ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

ஆண்: காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்....
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்....

ஆண்: சுதந்திரமே
சோதனையா வேதனையா....

ஆண்: ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

குழு: ஓ ஓஹ்ஹோ ஓ.....

ஆண்: தேர்தலினால் பல கட்சிகளால்
தேவைகள் தீர்ந்திடவில்லை
தோல்விகளால் அதன் வேதனையால்
தலைவர்கள் திருந்திடவில்லை

ஆண்: வென்றவரோ ஊழலென்னும்
ஊஞ்சலில் ஆடுகிறான்
வாக்குகளை போட்டவனோ
வறுமையில் வாடுகிறான்

ஆண்: என்றைக்கு இந்நிலை மாறும்
இலையுதிர் காலங்கள் ஓடும்
பசி கொண்ட பூமியில்
பசுமையின் புரட்சிகள் நடக்குமோ

குழு: வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆண்: ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு
தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

ஆண்: காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்

ஆண்: சுதந்திரமே
சோதனையா வேதனையா

ஆண்: ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

A little space to find your voice.

About Dhesiya Geetham

Dhesiya Geetham is a song from Desiya Geetham (1998). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer