Kaviyan Kaviyan Bharathi Song Lyrics

Pandavar Bhoomi·2001

Pandavar Bhoomi movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: கவிஞன் கவிஞன்
பாரதி கேட்டான் காணி
நிலத்தில் ஒரு வீடு கவிஞன்
வழியில் நானும் கேட்டேன்
கவிதை வாழும் சிறு வீடு
சிறு வீடு சிறு வீடு சிறு
வீடு சிறு வீடு

பெண்: ஒரு பக்கம் நதியில்
ஓசை ஒரு பக்கம் குயிலின்
பாஷை இளம் தென்னையின்
கீற்று ஜன்னலை உரசும்
திருவீடு

பெண்: விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே சிறு
தென்னங்குயில்கள் பாடி
எழுப்பிவிட தென்றல் வந்து
வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம்
வரையும்படி விரும்புதே

பெண்: விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே

குழு: தக தீம்த தீம்த
திர திரனா (7)
தக தீம்த தீம்த திரதிர
திர திர திரனா

பெண்: கனா கண்டு தூங்கும்
வரையில் நிலா வந்து
கதைகள் சொல்ல கண்ணாடி
முற்றம் ஒன்று வேண்டுமே

பெண்: மின்னல் வந்து
தீண்டும் போது வெட்கம்
வந்து மூடிக்கொள்ள
கண்களாக ஜோடி
ஜன்னல் வேண்டுமே

பெண்: பறந்தோடும்
பறவை கூட்டம் இரவோடு
தங்கி செல்ல மரகத மாடம்
ஒன்று வேண்டுமே

பெண்: கொலுசொலியும்
கொலுசொலியும் சிரிப்பொலியும்
சிரிப்பொலியும் எதிரொளித்து
எதிரொளித்து இசை வரனும்

பெண்: இந்த வாசல்
வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள்
கூடும்படி பேசும் வார்த்தை
கவிதை ஆகும்படி விரும்புதே

பெண்: விரும்புதே
மனசு விரும்புதே
விரும்புதே மனசு
விரும்புதே

பெண்: கோடைகால
மேகம் வந்து மொட்டை
மாடி மேலே நின்று
குடிதண்ணீர் பொழியும்படி
வேண்டுமே

பெண்: வாழ்ந்தவர்கள்
கதையை சொல்லி
வருங்கால கனவை
எண்ணி ஊஞ்சலாட
திண்ணை ரெண்டு
வேண்டுமே

பெண்: தலைமுறை
மாறும்போதும் பரம்பரை
தாங்கும் வண்ணம் தங்க
மணி தூண்கள் ஏழு
வேண்டுமே

பெண்: சிலர் நினைவாய்
பெரும் கனவாய்
அரண்மனையாய்
அதிசயமாய் இது வருமோ

பெண்: நல்லார் கண்கள்
கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று
வாழ்த்தும்படி எல்லா உறவும்
வந்து வாழும்படி விரும்புதே

பெண்: விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே சிறு
தென்னங்குயில்கள் பாடி
எழுப்பிவிட தென்றல் வந்து
வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம்
வரையும்படி விரும்புதே

பெண்: விரும்புதே மனசு
விரும்புதே விரும்புதே
மனசு விரும்புதே

A little space to find your voice.

About Kaviyan Kaviyan Bharathi

Kaviyan Kaviyan Bharathi is a song from Pandavar Bhoomi (2001). Performed by K. S. Chithra. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer