Koodavaruviya Song Lyrics

Valmiki·2009

Movie
Valmiki
Singer
Bela Shinde
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண்: கைகளோடு கைகள் கோர்த்து
காலம் முழுதும் விலகாமல்
பகலும் இரவும் பயணம் முழுதும்
பாதை மாறிப் போகாமல்
வழித்துணை என நீயும்
கடைசி வரையில் என்னோடு

பெண்: கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண்: என்னை எடுத்து உந்தன் கையில்
என்று தந்தேன் என்று
இன்று நினைத்தேன் அன்று நடந்த
அந்த விந்தைகளை

பெண்: மலர் வனம் பூப் பூப்பதும்
விருந்தென தேன் தருவதும்
ஒரு மனம் ஓர் நொடியிலே
தன்னை இழந்தே தவிப்பதும்

பெண்: என்னவென்று...
ஆஆ...ஆஆ... ஆ...
என்னவென்று புரிந்ததின்று
இதற்கு எது இங்கு காரணம்
நீ இல்லாமல்
வாழ்க்கை ஒன்று இனியேது

பெண்: கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண்: யாரும் இல்லா காதல் தீவில்
உலகில் ஓர் மூலையில்
தன்னந்தனியே குடிலை அமைத்து
அன்பு பரிமாறலாம்

பெண்: தடை வரும் கால தேவதை
மழலைகள் போல் வரட்டுமே
கந்தர்வ கானங்களின்
அமுதினைத் தான் தரட்டுமே

பெண்: வெள்ளிப் பனியின்...
ஆஆ...ஆஆ... ஆ...
வெள்ளிப் பனியின் மலையின் ஓரம்
வைர மணித் தேரின் ஊர்வலம்
கண்ணில் மின்னும்
கன்னி கனவு நனவாக

பெண்: கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

பெண்: கைகளோடு கைகள் கோர்த்து
காலம் முழுதும் விலகாமல்
பகலும் இரவும் பயணம் முழுதும்
பாதை மாறிப் போகாமல்
வழித்துணை என நீயும்
கடைசி வரையில் என்னோடு

பெண்: கூட வருவியா
என் கூட வருவியா
கூட வருவியா
என் கூட வருவியா

A little space to find your voice.

About Koodavaruviya

Koodavaruviya is a song from Valmiki (2009). Performed by Bela Shinde. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer