Kulebakavali Song Lyrics

Vallal·1997

Movie
Vallal
Singer
Pushpavanam Kuppusami and Anuradha Sriram
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: குலுகுலு குலுகுலு குலுகுலு
குலுகுலு குலுகுலு குலேபகாவலி
ஹா கொதிக்கொதிக்குது கொடிப் பிடிக்குது
குத்தாலத்துப் புலி ....

ஆண்: ஹாங் ஹாஹா ஹாங்
ஹாங் ஹாஹா ஹாங்

ஆண்: நான் போடட்டுமா அஞ்சலை
பொண்ணுக்குத்தான் அஞ்சல
ஆடட்டுமா பரமபதம் நெஞ்சிலே

பெண்: ஹாங் கொண்ட வெச்ச சேவலே
களப்புறியே ஆவல
என்ன நீயும் ஜெயிச்சுப்புட்டா தேவல

ஆண்: ஏத்து பூத்திரி அடி நான்
ராத்திரி ஆட்டத்தில் போக்கிரி

பெண்: அட தள்ளி நின்னு பாடய்யா
தாயங்கள போடய்யா
எதுக்க நிக்கும் ஏணி மேலே
ஏறிக்கிட்டு ஆடய்யா

ஆண்: ஹா சுருளிமல சிட்டு நீ
சீனி சக்கரப் புட்டு
நான் உன்ன இப்போ தோக்கடிப்பேன்
வச்சுப்போமா பெட்டு

ஆண்: நான் ஜெயிச்சுப்புட்டா
பாவம் உன் கதி
நான் துப்பறிஞ்சு
சொல்லிடுவேன் மொத்த சங்கதி

பெண்: நான் ஜெயிச்சுபுட்டா
சும்மா நிக்கணும்
நான் சொல்லப் போற ஜோடிய
நீ சேத்து வைக்கணும்..

ஆண்: குலேபகாவலி

ஆண்: அடி வாடியம்மா ஹவாலா
உடுறியே நீ சவாலா
சிக்கிக்கிட்டா நிக்கணுமே திவாலா

பெண்: அட ஆம்பளைய பொம்பள
முடிஞ்சு வைப்பா மடியிலே
ஆரவல்லி சூரவல்லி கதையில

ஆண்: ஏம்மா ஓட்டுறே என்ன நீ முட்டுறே
தம்பட்டம் தட்டுறே

பெண்: நான் போடுறேன் பார் ரெண்டுதான்
எடுக்கிறேன் பார் பெண்டுதான்
உன்னுடைய காய நானும்
வெட்டிடுவேன் துண்டுதான்

ஆண்: அடி போடுது பார் மூணு
நான் ரோஷமுள்ள ஆணு
நீ நீளமான பாம்ப பாத்து
நடுங்கப் போற மானு

பெண்: நாலு போட்டு மேல ஏறுவேன்
என் மச்சானே
நீ நடுல நின்னா
கால வாருவேன்

ஆண்: நான் அஞ்சுப் போட்டு
உன்ன ஓட்டுவேன்
என் கையில் நீயும் கைய வச்சா
தண்ணிக் காட்டுவேன்...

ஆண்: குலேபகாவலி...

முனங்கல்: .................

இசை: .....................

பெண்: நான் ஆறு ஏழு எட்டு தான்
போட்டுப்புட்டா வெட்டு தான்
ஒம்பதுக்கு பயப்படுமா சிட்டுதான்

ஆண்: அடி ஏகாதசி நைட்டுதான்
எனக்கும் உனக்கும் பைட்டுதான்
ராத்திரியில் எது செஞ்சாலும் ரைட்டுதான்

ஆண்: பாரு வீரத்த பொறவு ஏத்துப்பே
மாமனின் சூரத்த

பெண்: நெஞ்ச வண்டு போல குடையுறே
தயிருப் போல கடையுறே
நாடி நரம்பில் முறுக்கு ஏத்தி
பாயப் போல முடையுறே

ஆண்: நான் போடட்டுமா பாயி
நீ சேதி சொல்லு தாயி
உன் பேரச் சொல்லி நித்தமுந்தான்
பாட்டெடுக்கும் வாயி

பெண்: நான் எட்டு மொழம் வேட்டியாகணும்
என் மாமா உன் இடுப்புல
நான் ஒட்டி ஆகணும்

ஆண்: நான் உங்க வீட்டு படுக்கை ஆகணும்
என் மேலே நீயும் எப்பவுமே
படுத்து தூங்கணும்

ஆண்: குலேபகாவலி

முனங்கல்: ...................

இசை: ....................

ஆண்: அடி ஈரக் காத்து வீசுது
என் ஒடம்பு கூசுது
வெண்ணிலாவும் நெருப்ப அள்ளி பூசுது

பெண்: என்ன ஓரங்கட்ட பாக்குறே
உதவ சொல்லிக் கேக்குறே
ஊசியிலே நூலு நல்லா கோக்குறே

ஆண்: சோக்காப் பாடுறே சொகுசா ஆடுறே
பாதி ஏன் மூடுறே

பெண்: அட சும்மா வந்து தொனப்புறே
சொன்னத சொல்லி சொதப்புறே
வெத்தலப் போல என் நெனப்ப
நெஞ்சுலப் போட்டு கொதப்புறே

ஆண்: நான் உன்னுடன் தான் சேர்ந்து
வந்து ஒட்டிக்கிட்ட கோந்து
நான் ஒவ்வொண்ணாக கொடுப்பத
உன் கன்னத்துல ஏந்து

பெண்: நீ சும்மா கெடந்த சங்க ஊதுறே
நான் வெலகி நின்னா
வந்து வந்து மேல மோதுறே

ஆண்: நான் ரவுண்டு அடிச்சா குத்தமில்லடி
அடி எந்தப் பயலும்
ராப்பொழுதில் சுத்தமில்லடி

ஆண்: குலேபகாவலி.......

A little space to find your voice.

About Kulebakavali

Kulebakavali is a song from Vallal (1997). Performed by Pushpavanam Kuppusami, Anuradha Sriram. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer