Om Namaha Song Lyrics

Idhayathai Thirudathe·1989

Idhayathai Thirudathe movie poster
Singer
Mano and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ம்ம்ம் ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்

பெண்: ஓம் நமஹ
உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹ உறவின்
உதவிக்கு ஓம்

ஆண்: வான் வழங்கும்
அமுத கலசம் வாய்
வழியே ததும்பி ததும்பி
வழியிதோ ஓஓஓ

பெண்: தேன் பொங்கும்
தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில்
விழுந்ததோ

ஆண்: மூங்கில் காற்று
நுழைந்து மோகனம்
பாடுதா

பெண்: நால்வகை நாணம்
மறந்து நாடகம் ஆடுதா

ஆண்: ஆயிரம் சூரியன்
நாடியில் ஏறுதா

பெண்: ஆதியும் அந்தமும்
வேர்வைகள் ஊறுதா

ஆண்: நூலாடை விலகி
விலகி நீரோடை பெருகி
வழியும் வேளை

பெண்: முத்தங்கள் வைத்ததும்
மூன்று உலகை மறந்த
நெஞ்சுக்கு ஓம்

பெண்: செவ்விதழ்
சேரும்போது ஜீவன்கள்
சிலிர்த்தது

ஆண்: ஒவ்வொரு
ஆசையாக உள்ளத்தில்
துளிர்த்தது

பெண்: மெல்லிய மேனியும்
சில்லென ஆனது

ஆண்: வெட்கமும் சீக்கிரம்
விடை பெற்றுப் போனது

பெண்: ஏனென்று இதயம்
இருக்க நூலொன்று இதயம்
எழுதாதோ

ஆண்: இளமையின்
இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய
கன்னிக்கு ஓம்

பெண்: ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்

A little space to find your voice.

About Om Namaha

Om Namaha is a song from Idhayathai Thirudathe (1989). Performed by Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer