Konjum Pura Song Lyrics

Aanazhagan·1995

Aanazhagan movie poster
Singer
Mano and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ
மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ

பெண்: எண்ணிரண்டு வயதில் நான் ஏங்கிட
கண் இரண்டும் இமைகள் மூடுமா
நள்ளிரவில் எனது நூலாடையில்
பள்ளி கொள்ளும் தருணம் கூடுமா

ஆண்: ராதைப் பெண்ணே காதல் மன்னன்
போதைக்கேற்ற மாயக் கண்ணன்
ஜாலம் காட்டுவான்

பெண்: ஹஹஹாஹ்

ஆண்: ஆணிப் பொன்னின் அங்கம் எங்கும்
ஆசை வெள்ளம் பொங்கும் வண்ணம்
கோலம் தீட்டுவான்

பெண்: பறிக்கச் சொல்லுது
இந்த பவள மல்லிகை
வா வா அதிகாலையும் மாலையும்
வீசும் இதன் ஆனந்த வாசம்

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண்: பெண்ணுக்குள்ளே அழகி நீ தான் என
கண்ணுக்குள்ளே மயக்கம் தோன்றுதே
அத்தி மரக் கனியும் நீ தான் என
கொத்தித் தின்ன இளமை தூண்டுதே

பெண்: ஆடை சுற்றும் கோயில் தெப்பம்
கூடச் சுற்ற கோடை வெப்பம் தீர்ந்து போகுமா
ஆளைத் தொட்டும் தோளைத் தொட்டும்
காளை கட்டும் காதல் மெட்டும் தேவ கானமா

ஆண்: கலைந்திடாமலே இந்த கானம் வாழுமே
நாளும் இள மாலையில் வாலிபம்
ஓதும் இந்த மன்மத வேதமே

பெண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண்: கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ

பெண்: மீண்டும் பொன் மாலையில்
மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண்: கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

பெண்: கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ

A little space to find your voice.

About Konjum Pura

Konjum Pura is a song from Aanazhagan (1995). Performed by Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer