Oru Sudar Iru Sudar Song Lyrics

Rajavin Parvaiyile·1995

Rajavin Parvaiyile movie poster
Singer
Mano and S. Janaki
Lyricist
Kamakodi
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: தந்தா னானா னானா னானா ஓ.....ஓ...
தந்தா னானா னானா னானா ஓ.....ஓ......ஓ......ஓ...

பெண் குழு: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி
கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று
காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்

பெண்: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

பெண் குழு: ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஹோ...

பெண்: நான் ஓர் வரம் உன்னிடம் வாங்க வேண்டும்

பெண் குழு: மங்கலக் குங்குமம் மஞ்சள் பூசியே
பண்டிகை நாள் என ஒன்றாய்க் கூடியே

ஆண்: நூறாண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்

பெண் குழு: ஜோதியை வீதியில் எங்கும் ஏந்தியே
ஆதியை அன்னையை நெஞ்சில் போத்தியே

பெண்: நாம் கேட்கும் யாவும் நம் கையில் சேரும்
நாம் பார்க்கும் யாவும் பூஞ்சோலை ஆகும்

ஆண்: வானம் பாடிகள் கானம் பாடிடும்
பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுவதும்

பெண்: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி

ஆண்: திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

பெண்: கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று

ஆண்: காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று

ஆண்: ஓர் ஆயிரம் ஆசைகள் ஊஞ்சல் ஆடும்

பெண் குழு: நெஞ்சிலே நெஞ்சிலே நேசம் பூத்ததே
கொஞ்சலாய் கொஞ்சவே நேரம் வாய்த்ததே

பெண்: ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்

பெண் குழு: தோகையின் தோகையின் தேகம் வாடுது
தென்றலும் தென்றலும் ராகம் பாடுது

ஆண்: பொன் மாலை தோறும் பூந்தீபம் ஏற்றும்
சிருங்காரம் கூடும் நல் யோகம் வேண்டும்

பெண்: தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்
என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்

ஆண்: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி

பெண்: திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

ஆண்: கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்
அண்ணக் கிளியே ஏற்று

பெண்: காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்
அம்மன் அடியே போற்று

பெண் குழு: நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்
நல்ல நாளாம் திரு நாளாம்
ஒளிக் கோலம் திருக் கோலம்

பெண் குழு: ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்
முத்துச் சுடர் ஆடுதடி
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
வண்ணச் சுடர் ஆடுதடி

A little space to find your voice.

About Oru Sudar Iru Sudar

Oru Sudar Iru Sudar is a song from Rajavin Parvaiyile (1995). Performed by Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Kamakodi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer