Thaalaatu Ketkaatha Song Lyrics

Paattukku Naan Adimai·1990

A continuous glide, at your pace.
Text size

ஆண்: தாலாட்டு கேக்காத பேர்
இங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல்
வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு.....

ஆண்: தாலாட்டு கேக்காத பேர்
இங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல்
வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

ஆண்: ஆவாரம் காடெல்லாம்
நீரோடும் தோப்பெல்லாம்
யாராரு வேலை செய்வதாரு
பூவாரம் கேட்டானா
பொன்னாரம் கேட்டானா
சோறுக்கு வேண்டி நிக்கும் தேரு

ஆண்: பொன் மின்ன வெள்ளி மின்ன
வைரங்கள் மின்ன
தொழிலாளி கைகள் படத்தான் வேணும்

ஆண்: தாய் உண்ண சேயும் உண்ண
நாமென்றும் உண்ண
விவசாயிதான் உழைக்க வேணும்
ஏழை அவர்பாடு அது காற்றோடு போயாச்சு

ஆண்: ஏரோட்டி போனாலே
எல்லோர்க்கும் சோறு
தோள் கேட்டு போவானே
அவன் பாடும் பாட்டு
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
கூ.....கூ....கூக்கு.......
கூ.....கூ....கூக்கு.......

ஆண்: நாடாளும் பேர் என்ன
மாடோட்டும் பேர் என்ன
யாராரு ஒன்னப் பெத்ததாரு....
விஞ்ஞானி ஆனாலும்
மெய்ஞானி ஆனாலும்
தாய்தானே பெத்துப் போட்டா கூறு

ஆண்: பகல் என்ன இரவும் என்ன
என்றென்றும் இங்கே
ஆணுக்குப் பெண்ணின் துணை வேணும்

ஆண்: வெயில் என்ன மழையும் என்ன
காலங்கள் தோறும்
அன்புக்குத் தாயும் இங்கே வேணும்
தாய்தான் படும்பாடு
அதை உணர்வாயே கண்மணி

ஆண்: தாலாட்டு கேக்காத பேர்
இங்கு யாரு
தாயாரின் தாலாட்டு போல்
வேறு ஏது
பாட்டுக்கு நான் அடிமை
அந்தப் பாட்டுக்கு நான் அடிமை
தாய் போலே இங்கு வேறாரு
நம் தாய் போலே இங்கு வேறாரு.....

A little space to find your voice.

About Thaalaatu Ketkaatha

Thaalaatu Ketkaatha is a song from Paattukku Naan Adimai (1990). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Ponnadiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer