Vaigai Nathioram Duet Song Lyrics

Rickshaw Mama·1992

Rickshaw Mama movie poster
Singer
S. Janaki and S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

பெண்: எண்ணம் என்னும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் மூச்சில்.....

ஆண்: வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண்: இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் கா....த்தே

பெண்: வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

ஆண்: ஆமா

பெண்: கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண்: கரெக்ட்டு இது கரெக்ட்டு

ஆண்: மாலை மழை மேகம் தன்னை
மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று
தூது சொல்லத்தான்

பெண்: மூண்டு வரும் மோகம் தன்னை
மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம்
நானும் மெல்லத்தான்

ஆண்: ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்

ஆண்: இதன் தாளம் ராகம்
பாவம் அன்பை கூறும்

பெண்: வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

பெண்: யாரின் மனம் யாருக்கென்று
இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு
தேவன் சொல்லித்தான்

ஆண்: பூஜைக்கிது ஏற்றதென்று
மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று
சூடிக்கொள்ளத்தான்

பெண்: ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்

பெண்: இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் கா....ற்றே

ஆண்: வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

பெண்: கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண்: இது அன்பின் வேதம்

பெண்: அதை நாளும் ஓதும்

ஆண்: இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் கா...த்தே

பெண்: வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது

ஆண்: கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

A little space to find your voice.

About Vaigai Nathioram Duet

Vaigai Nathioram Duet is a song from Rickshaw Mama (1992). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer