Yeh Pattu Pottachu Song Lyrics

Rickshaw Mama·1992

Rickshaw Mama movie poster
Singer
Mano and Swarnalatha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ... பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாளம்மா

ஆண்: சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா
சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா

பெண்: ஆஹ ஏ... பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளையா
ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா

ஆண்: மேடை போலே தேகம்
மேடைக்கு மேலே தாகம்
ஆடை மூடும் கோலம்
ஆனந்தம் சிந்தும்

பெண்: கோடை கால மேகம்
கொண்டு வராதோ மோகம்
ஜாடை கூறும் பார்வை
சம்மதம் சொல்லும்

ஆண்: பூந்தேகம் ஏந்தும் போது
பூங்காற்றும் ஏங்கும்

பெண்: போராட்டம் ஓயும் போது
பூங்காலை தோன்றும்

ஆண்: இனி ஆனந்தம் ஆடும்
எங்கும் ஹோய்

பெண்: ஏ... பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளையா
ஆஹா ஏ... கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா

ஆண்: ஆஹா...

பெண்: மனமோ மாம்ம மம்மம்மா

ஆண்: ஆஅ

பெண்: மயங்கும் இன்னொரு வண்ணம்மா

ஆண்: ஹேய்

பெண்: மனமோ மமாம்ம மம்மம்மா

ஆண்: மம்மம்மா

பெண்: மயங்கும் இன்னொரு வண்ணம்மா

ஆண்: ஏ... பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா
ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாளம்மா ஹோ ஹோ

பெண்: தேவ லோகம் தானா
சேர்ந்தது என்ன நானா
காதல் என்ன தேனா
காவியம் தானா

ஆண்: பாடிப் பாடிப் பார்த்து
பாதை விடாமல் சேர்த்து
தேடித் தேடி கோர்த்து
சேர்ந்தது முத்து

பெண்: வா இங்கே வைகை என்று
ஏங்காதோ பெண்மை

ஆண்: ஆஹாஹா பூவை தேகம்
பூப்போல மென்மை

பெண்: எனை நீராட்டி தாலாட்டவோ

ஆண்: ஏ... பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா

பெண்: அட ஏய் கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா

ஆண்: சுகமோ மாம்ம மம்மம்மா
தினமும் சொல்லடி கண்ணம்மா

பெண்: மனமோ மாம்ம மம்மம்மா
மயங்கும் இன்னொரு வண்ணம்மா

ஆண்: ஹே ஏ... பாட்டு போட்டாச்சு
பாடிப் பாத்தாச்சு கேளம்மா

பெண்: ஆஹ ஏ... கூட நீ சேர்ந்து ஆட
ஜோரான நாள்ளயா

A little space to find your voice.

About Yeh Pattu Pottachu

Yeh Pattu Pottachu is a song from Rickshaw Mama (1992). Performed by Mano, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer