Vazhavaikkum Kaathalukku Song Lyrics

Apoorva Sagodharargal·1989

Apoorva Sagodharargal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும்
ஜெய்

பெண்: தூதுவிட்ட கண்கள்
உன்னை தேடுதே அம்பு விட்ட
காமனுக்கும் ஜெய்

ஆண்: வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கு ஜெய்

பெண்: வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும்
ஜெய்

பெண்: ஹா..........................
நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க

ஆண்: கன்னி விழி
பட்டுச்சே காளை மனம்
கெட்டுச்சே மெய்யணைக்க
மெய்யணைக்க

பெண்: கள்ளோடும்
முள்ளோடும் தள்ளாடும்
செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன
ரசிச்சேன்

ஆண்: முன்னாலும்
பின்னாலும் முத்தாடும்
இந்நேரம் மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்

பெண்: பார்வை தன்னில்
நாளும் நீந்தும் பாவை
ஒரு மீனாச்சே

ஆண்: தேகம் தன்னை
நாளும் மூட ஆடை
இந்த ஆண் ஆச்சே

பெண்: வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

ஆண்: வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும்
ஜெய்

பெண்: தூதுவிட்ட கண்கள்
உன்னை தேடுதே அம்பு விட்ட
காமனுக்கும் ஜெய்

ஆண்: வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

பெண்: வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும்
ஜெய்

ஆண்: தேன் மழையும்
கொட்டுச்சே தேகம்
எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம்
நிற்க

பெண்: பெண் மனது
அஞ்சிச்சே போதும்
என்று கெஞ்சிச்சே
வஞ்சி என்னை
கொஞ்ச கொஞ்ச

ஆண்: உன் மடி பொன்
மடி மன்னவன் கொண்டாடும்
நேரம் என்ன சொல்லடி
சொல்லடி சிந்திச்சே

பெண்: பொன் மகள் பூ
மகள் என் மனம் எந்நாளும்
தஞ்சம் என்று உன்னிடம்
உன்னிடம் வந்துச்சே

ஆண்: வாடை என
நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே

பெண்: வாரி எனை
நானும் தந்தேன்
வாலிபம் தான்
மேலாச்சே

ஆண்: வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

பெண்: வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்

ஆண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: வாலிபத்தின்
பாடலுக்கும் ஜெய்

ஆண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: தூதுவிட்ட கண்கள்
உன்னை தேடுதே அம்பு விட்ட
காமனுக்கும் ஜெய்

பெண்: வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

ஆண்: வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்

பெண்: வாலிபத்தின்
பாடலுக்கும் ஜெய்

ஆண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்

ஆண்: வாலிபத்தின்
பாடலுக்கும் ஜெய்

A little space to find your voice.

About Vazhavaikkum Kaathalukku

Vazhavaikkum Kaathalukku is a song from Apoorva Sagodharargal (1989). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer