Anbe Vaa Anbe Song Lyrics

Ezhai Jaathi·1993

Ezhai Jaathi movie poster
Singer
Minmini
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: முத்து மண்டபம்... நட்ட நடுவே...
சித்திரக் கிளி... தன்னந்தனியே...
துணை கிட்டுமா... ஆஅ ...வந்து சேருமா...

பெண்: அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ

பெண்: அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ

பெண்: என்னை நம்பி வாழவில்லை
என் வசத்தில் நானும் இல்லை
உன்னை நம்பி வாழுகின்றேன்
பேசும் தெய்வமே

பெண்: காலம் தோறும் காவல் நின்று
கன்னி என்னை காப்பதென்று
நீயும் சொன்ன வார்த்தை இன்று
நெஞ்சில் ஆடுமே

பெண்: தூது போக தோழி இல்லை
சேதி சொல்ல யாரும் இல்லை
ஆன போதும் நீ இல்லாது
நானும் இங்கு வாழ்வதேது

பெண்: தேடினேன்... தேடினேன்...
தேகமே வாடினேன் தேய்பிறை ஆகினேன்
உன்னைப் போல உள்ளம் ஒன்று
என்னைக் காக்க உள்ளதென்று பாடினேன்...

பெண்: அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ

பெண்: நாலு பக்கம் தீயை வைத்து
நடுவில் இந்த பூவை வைத்து
காலம் செய்யும் லீலை இங்கு
நியாயம் ஆகுமா

பெண்: காயும் பூவும் வாடி நிற்க
வாடும் பூவை வாழ வைக்க
நீயும் வந்து சேர்வதற்கு
நேரம் ஆகுமா

பெண்: வாசல் தேடி வாழ்த்து பாடி
வருவதென்று வானம்பாடி
இன்னும் இன்னும் நானும் வாடி
என்னவாகும் ஜீவ நாடி

பெண்: போதுமே... சோதனை...
நான் படும் வேதனை கூடவா மாதெனை
உன்னை அன்றி இன்னொருவன்
கைகள் தொடப் பட்டு விடும் பூங்கொடி...

பெண்: அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ

A little space to find your voice.

About Anbe Vaa Anbe

Anbe Vaa Anbe is a song from Ezhai Jaathi (1993). Performed by Minmini. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer