Yezhai Jathi Kozhai Jathi Illai Song Lyrics

Ezhai Jaathi·1993

Ezhai Jaathi movie poster
Singer
P. Jayachandran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல

குழு: ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

ஆண்: ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு

குழு: ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

ஆண்: வெள்ளையன் ஆள்கிற நேரத்திலும்

குழு: அடிமைகளாய் இருந்தோம்

ஆண்: விடுதலை வாங்கிய போதினிலும்

குழு: விடியும் என்றே இருந்தோம்

ஆண்: ஆட்சியில் ஏறிய நம்மவர்கள்
அவர் வழி பார்த்துக் கொண்டார்

பெண் குழு: அவதியில் வாழ்கிற ஏழைகளோ
அவர் முகம் பார்த்து நின்றார்

ஆண்: முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை

குழு: முதல்வர்கள் தான் இங்கு மாறுகிறார்
முடிவுகள் மாறவில்லை
ஆட்சிகள் தான் இங்கு மாறுதையா
நம் அவதிகள் மாறவில்லை

ஆண்: இனி பொறுத்திருந்தால் தடுப்பதற்கு
உனக்கென யாரும் இல்லை
இதை புரிந்து கொண்டால் தெரிந்து கொண்டால்
வேறெதும் தேவை இல்லை....

குழு: ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

ஆண்: ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு

குழு: ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல

குழு: ..........................

ஆண்: ஜனத் தொகையில் நாம் வலுத்தவர்கள்

குழு: பணத்தினில் இளைத்தவர்கள்

ஆண்: மனத்தளவில் நாம் உயர்ந்தவர்கள்

குழு: மனிதரில் சிறந்தவர்கள்

ஆண்: நிலங்களை நேசித்து கலம் விளைத்தோம்
நமக்கென நிலங்கள் இல்லை

குழு: வளங்களை பூமிக்கு வரவழைத்தோம்
நமக்கொரு வளங்கள் இல்லை

ஆண்: வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை

குழு: வறுமைகள் பரம்பரை தலைவிதியா
எழுதியதெவரும் இல்லை
வழிகளை மாற்றிடத் தெரிந்து கொண்டால்
எழுவதில் தவறும் இல்லை

ஆண்: நம் தவறுகளை திருத்திக் கொண்டால்
தடைகளும் ஏதும் இல்லை
நம் தலை எழுத்தை மாற்றிடுவோம்
இதை விட நீதி இல்லை.....

குழு: ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏ மானிடனே மானிடனே
ஒன்று சேர்ந்து கூடு
ஒரு போர் பரணி புதுப் பரணி
புதிய கீதம் பாடு

குழு: ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
வாழும் போது வளைந்து நாங்கள் செல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல

A little space to find your voice.

About Yezhai Jathi Kozhai Jathi Illai

Yezhai Jathi Kozhai Jathi Illai is a song from Ezhai Jaathi (1993). Performed by P. Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer