Ottu Kettu Odi Varuvaan Song Lyrics

Uyir Thamizhukku·2024

Singer
Guru
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே...ஏ....ஏ....ஏ....ஏ.....
ஓட்டு கேட்டு ஓடி வருவான்
நம்பிடாதீங்க
காச நீட்டி ஆசை காட்டுவான்
வாங்கிடாதீங்க

ஆண்: ஏ....என்ன திட்டத்தோட
வாராங்கனு தெரியல
யார யார் ஜெயிப்பா
ஒண்ணுமே புரியலை

ஆண்: கடைசியில தோக்குறது
நாமதான்டா வாழ்விலா

ஆண்: அப்பு டப்பு டப்பு டப்பு
எல்லாருமே தப்புடா
யோக்கியன்னு சொல்லுறவன்
மூஞ்சி மேல அப்புடா

ஆண்: அஞ்சு வருசத்துக்கு
உன்ன அடிமையாக்க
ஆசை வார்த்தைகளத்தான் பேசுவான்

ஆண்: என்ன வேணுமுன்னு
நீயும் கேட்க்கும் முன்னே
அள்ளி வாக்குறுதி வீசுவான்

ஆண்: ஜாதி மதத்த வச்சு
ஊரு உறவ வச்சு
ஓட்ட பிரிச்சு வேட்டை ஆடுவான்

ஆண்: ஆட்சி பிடிச்சவனும்
ஆண்டு முடிச்சவனும்
அழகா காரில் ஏறி ஓடுவான்

ஆண்: அவன் நோட்டுக்கு நீ
விலை போனா என்னாகும்
உன் ஓட்டுலதான்
வாழுறான்டா எல்லோரும்

ஆண்: சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்

ஆண்: ஆட்சி அதிகாரத்தில்
இருக்கும் முரடுனுங்க
தேர்தல் ஆணையத்த முடக்குறான்

ஆண்: பக்கா திருடனுங்க
முக்கா மடையனுங்க
அடவாடி செஞ்சே ஜெயிக்குறான்

ஆண்: ஓட்டு பெட்டிக்குள்ள
நம்ம வாழ்க்கையைத்தான்
பூட்டி போடுவான் பாத்துக்கோ

ஆண்: நம்ம தலையெழுத்த
நம்ம ஓட்ட வச்சே
மாத்தி எழுதிடுவான் முழுச்சுக்கோ

ஆண்: மக்கள் வரி பணத்தில்
எவ எவனோ வாழுறானே
இங்க வந்தவனும்
வலுத்தவனும் வாழுறானே

ஆண்: சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்

A little space to find your voice.

About Ottu Kettu Odi Varuvaan

Ottu Kettu Odi Varuvaan is a song from Uyir Thamizhukku (2024). Performed by Guru. Music by Vidyasagar. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer