Aanju Aanju Song Lyrics

Uyir Thamizhukku·2024

Singer
Karthik
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
இந்த சண்டாளி
அஞ்சா நெஞ்ச கெஞ்ச வச்சுப்புட்டா

ஆண்: கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டா
அட பங்காளி
கொள்கை எல்லாம் காத்துல ஏத்திப்புட்டா

ஆண்: நல்லாதானே நான் இருந்தேன்
நேத்து வர தன்னால
நாட்டை கொஞ்சம் திருத்த வான்னு
சொன்னாளே கண்ணால

ஆண்: என்ன சொல்லுற சகல
அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
அட அங்கிட் நிக்கிற விடல
என்னை எங்கிட்டும் நகர விடல

ஆண்: ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
இந்த சண்டாளி
ஆக்கங்கெட்ட கூவ ஆக்கிப்புட்டா

ஆண்: எங்க இருந்தோ வந்து தொலைஞ்சா
நெஞ்சுல கோலம் வரைஞ்சா

ஆண்: ஒட்டு மொத்தமா உள்ள நுழைஞ்சா
அழகா மனச அறைஞ்சா
உச்சி வெயிலில் சுத்தி அலைஞ்சா
பௌவுர்ணமி போல தெரிஞ்சா

ஆண்: ஒத்த சிரிப்ப காட்டி மறைஞ்சா
ஆத்தாடி எங்கிட்டு ஒளிஞ்சா

ஆண்: மலையின்னா அழகர் மலை
சிலையினா ஆண்டாள் சிலை
தலை பூரா பூ முடிச்சும்
தளும்பாத அழகு கலை

ஆண்: வார்த்தை எதுமே வந்து விழல
மொத்த தமிழும் ஒத்து வரல

ஆண்: என்ன சொல்லுற சகல
அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
அட அங்கிட் நிக்கிற விடல
என்னை எங்கிட்டும் நகர விடல

ஆண்: பேர சொல்லி நீ பேச்சு கொடுக்க
பேச்சுல நானும் வழுக்க
ஊருக்குள்ள நீ ஒட்டி நடக்க
தாலுக்கா தாண்டி நான் பறக்க

ஆண்: என்ன தடவி மீச முறுக்க
கத்துகிட்டேனே சிரிக்க
மொத்த சிரிப்பும் ஆள உருக்க
இப்புடி ஏன்டி இருக்க

ஆண்: கரை வேட்டி கட்ட வச்சா
காடு மேடா சுத்த வச்சா
ஊரு பூரா என் முகத்த
தோரணமா தொங்க வச்சா

ஆண்: கட்சி கொடிக்கே காதல் பொறக்க
வாக்கு கொடுத்தேன் மேளம் அடிக்க

ஆண்: என்ன சொல்லுற சகல
அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
அட அங்கிட் நிக்கிற விடல
என்னை எங்கிட்டும் நகர விடல

ஆண்: ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
இந்த சண்டாளி
அஞ்சா நெஞ்ச கெஞ்ச வச்சுப்புட்டா

ஆண்: கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டா
அட பங்காளி
கொள்கை எல்லாம் காத்துல ஏத்திப்புட்டா

A little space to find your voice.

About Aanju Aanju

Aanju Aanju is a song from Uyir Thamizhukku (2024). Performed by Karthik. Music by Vidyasagar. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer