Aanatham Aanantham Nee Thanthathu Song Lyrics

Poottatha Poottukkal·1980

A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது

குழு: .................................

பெண்: தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவே
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது

பெண்: அன்போடு பாசம் சேர்ந்திட
ஊரும் பேரும் வாழ்த்திட
வாழைப்போல வாழ்கவே

பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது

பெண்: ஹே தவமா தவம் இருந்து தங்க மகன் உன்னை பெத்தேன்
அரச மரம் சுற்றி வந்து அரசாள உன்னை பெத்தேன்
பைத்தியமா நான் இருந்து பார் ஆள உன்னை பெத்தேன்
பாலாடை பைங்கிளியே கண் வளராய் கண் வளராய்

பெண்: ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ

பெண்: பாலூட்டும் போது நான் பார்க்கவோ
தாலாட்டும் போது நான் தூங்கவோ
மலரும் அரும்பு மடிமீது
இனிக்கும் கரும்பு கொடுத்தாயே
இணைந்த சொந்தமே

பெண்: கொண்டாடும் நேரும் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே

பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

பெண்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது

A little space to find your voice.

About Aanatham Aanantham Nee Thanthathu

Aanatham Aanantham Nee Thanthathu is a song from Poottatha Poottukkal (1980). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer