Aarengum Song Lyrics

Manasukketha Maharasa·1989

Manasukketha Maharasa movie poster
Singer
Mano and S. Janaki
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..

ஆண்: ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..

பெண்: {சாட எழுதி வைச்ச
சாந்து சுவத்தில் எல்லாம்
ஆடி மழையடிச்சு
அத்தனையும் கரைஞ்சிருச்சு} (2)

பெண்: {தாங்கலையே தாங்கலையே
ஆசை வைச்ச இந்த மனம்} (2)
வாழ வைச்சு பாக்கலயே
சேர்ந்திருந்த ஊரு சனம்....

பெண்: ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..

பெண்: மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால
யார் அடிச்சா சொல்லி அழு
நீர் அடிச்சா நீர் விலகும்.......

ஆண்: {காத்து மெல்ல தொட்டாலுமே
கறுத்தேதான் போகுமுன்னு
போத்தி வைச்ச ரோசாப் பூவை
போடுவேனா வெய்யிலில} (2)

ஆண்: {சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்கை நதி நீரு} (2)
சந்திரனும் களங்கமுன்னு
சொன்னது தான் நம்மூரு....

ஆண்: ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..

பெண்: ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..

A little space to find your voice.

About Aarengum

Aarengum is a song from Manasukketha Maharasa (1989). Performed by Mano, S. Janaki. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer