Vazhkaiye Vesham Song Lyrics

Aarilirunthu Arubathu Varai·1979

A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண்: காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்.....

ஆண்: அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்

ஆண்: நெஞ்சிலே ஈரம் அது
காய்ந்து போன பாலைதானா
வறண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்.......

பெண்: ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்........
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆரிரோரிரோரி ராரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ

ஆண்: மலர்களை அள்ளி தரும்
கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்

ஆண்: கலங்குதே கண்கள் நான்
போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண்: காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்......

A little space to find your voice.

About Vazhkaiye Vesham

Vazhkaiye Vesham is a song from Aarilirunthu Arubathu Varai (1979). Performed by Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer