Chinnavane Thennavane Song Lyrics

Panchalankuruchi·1996

Singer
S. Janaki, Krishnaraj and Bhuvana
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
வருந்தாம நடந்து பாரய்யா
இனி வருங்காலம் உனக்குதானய்யா...

பெண்: நாடாண்ட ராசாக்க
வாழ்ந்த எடம் என் மகனே
மண்ணுதான் காஞ்சிருக்கும்
இந்த மக்கள் மனசில ஈரமிருக்கும்

பெண்: கை காலு சுத்தமிருந்து
கள்ளமில்லா மனசிருந்தா
நாடு தெசை எங்கும்
உன் பேரு நெலச்சிருக்கும்....

பெண்: போருக்கு நீ போனா
புழுதி கெளம்பாதா
மகராசன் கம்பெடுத்தா
அந்த மதுரதான் கலங்காதா
நாளைக்கு பொழுது
அது உனக்காக விடியும்
நம்பிக்கை நீ கொண்டு
நடடா என் செல்ல மகனே...

ஆண்: கன்னிமாரு கோயில் ஓடையில
கஞ்சி கொண்டு போற பொன் மயில
மாலையில மாஞ்சோலையில
ஒரு வேலை இருக்கு வந்து விடு

பெண்: ஆசை மச்சான் காத்திருந்தேன் நான்
அரிசி பொரிச்சு கொண்டு வாறேன்
கூடிப் பேசி இருக்கத்தான் ஒரு
கோரப்பாயும் கொண்டு வாறேன்

பெண்: மாதம் மும்மாரி பெய்யும்
வளமான சீமையடா
கலப்ப காயும் முன்னே
கதிர் வெளையும் பூமியடா

பெண்: ரெண்டு கையில் கத்தி சுத்த
வம்சத்திலே வந்தவனே
சீமை எல்லாம் கப்பம் கட்ட
சீட்டெழுதி விட்டவனே

பெண்: பொன்னான பூமி ஆத்தா
தன்னால தர மாட்டா
வேர்வை வெதச்சு வச்சா
வெறுங்கையா விடமாட்டா
பாடுபடு மகனே
உன் பசி தாகம் தீரும்
பாஞ்சாலங்குறிச்சி
அது பச்சக்கொடிதான் காட்டும்.....

A little space to find your voice.

About Chinnavane Thennavane

Chinnavane Thennavane is a song from Panchalankuruchi (1996). Performed by S. Janaki, Krishnaraj, Bhuvana. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer