Andharangam Yaavume Song Lyrics

Aayiram Nilave Vaa·1983

Aayiram Nilave Vaa movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: எப்படி எப்படி

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: எப்படி எப்படி

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
அந்தரங்கம் யாவுமே

ஆண்: எப்படி எப்படி

ஆண்: சொல்வதென்றால் பாவமே

ஆண்: எப்படி எப்படி

ஆண்: அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா...
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா...
அந்தரங்கம் யாவுமே ...ஏ..ஏ...

ஆண்: காமனே நாணம் கொண்டால் சொல்லியது தீராது

ஆண்: எப்படி எப்படி

ஆண்: கம்பனே வந்தால் கூட
கட்டுபடியாகாது

ஆண்: எப்படி எப்படி

ஆண்: கண்டதில் இன்று நான்
சொல்வது பாதியே
காவிய நாயகி
கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள்
அந்த மயிலாள்
ஆடை நனைந்தாள்

ஆண்: ஹாஹான்

ஆண்: காயும் வரையில்
தோகை உடலில்
என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும்
போதையானதும்
என்னென்று சொல்ல

ஆண்: அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா...
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா...
அந்தரங்கம் யாவுமே ...

ஆண்: எப்படி ....
எப்படி எப்படி

ஆண்: காதலை தானம் கேட்டேன்
என்ன ஒரு தாராளம்

ஆண்: எப்படி எப்படி

ஆண்: நான் அவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம்

ஆண்: எப்படி எப்படி

ஆண்: தாவணிப் பூவினைச்
சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள்
கேள் அதைச் சொல்கிறேன்
பாவாடை உடலில் கோடி மலரில்
ஆடை அணிவேன்
ஆடை அறியும் சேதி முழுதும்
நானும் அறிவேன்
மீதியை நானுரைப்பதும்
நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

ஆண்: அந்தரங்கம் யாவுமே

ஆண்: எப்படி எப்படி

ஆண்: சொல்வதென்றால் பாவமே

ஆண்: எப்படி எப்படி

ஆண்: அந்தரங்கம் யாவுமே
சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை
மாளிகை அறியுமா...
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா...

ஆண்: ஏழையின் காதலை
மாளிகை அறியுமா...
காதலின் வாசனை
ம்ம்ஹ்ம் அறியுமா...

ஆண்: ஹ்ம்ம் அறியும்
இதுல என்ன இருக்கு

A little space to find your voice.

About Andharangam Yaavume

Andharangam Yaavume is a song from Aayiram Nilave Vaa (1983). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer