Ellorum Sollu Pattu Song Lyrics

Marupadiyum·1993

Marupadiyum movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..
ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து

ஆண்: மேடையே ...
வையகம் ஒரு மேடையே
வேஷமே...
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண்: எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து

ஆண்: நாயகன் மேலிரிந்து
நூலினை ஆட்டுகின்றான்
நாமெலாம் பொம்மை என்று
நாடகம் காட்டுகின்றான்

ஆண்: காவியம் போலொரு
காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி
காட்சியை மாற்றுவான்

ஆண்: ரயில் சிநேகமாய்
புயல் அடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண்: எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து

ஆண்: கோவலன் பாதை தன்னில்
மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால்
கண்ணகி எது இன்று

ஆண்: மானிடன் ஜாதகம்
இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை
தெளிந்தவர் நெஞ்சிலே

ஆண்: எது கூடுமோ
எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே....

ஆண்: மேடையே ...
வையகம் ஒரு மேடையே
வேஷமே...
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ஆண்: ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..
ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..

A little space to find your voice.

About Ellorum Sollu Pattu

Ellorum Sollu Pattu is a song from Marupadiyum (1993). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer