Enake Enaka Song Lyrics

Jeans·1998

Jeans movie poster
Movie
Jeans
Singer
P. Unnikrishnan and Pallavi
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எனக்கே எனக்கா

பெண்: எனக்கே எனக்கா

ஆண்: நீ எனக்கே
எனக்கா

பெண்: .............................

ஆண்: மதுமிதா
மதுமிதா மதுமிதா

ஆண்: { ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா } (2)

ஆண்: பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

பெண்: ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

ஆண்: பக்கெட் சைசில்
வெண்ணிலவு எனக்கே
எனக்கா பேக்சில் வந்த
பெண் கவிதை எனக்கே
எனக்கா

ஆண்: உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா உதட்டின்
மேலே படுத்துக்கலாமா

ஆண்: பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஆண்: ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

ஆண்: பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

ஆண்: அன்பே இருவரும்
பொடிநடையாக அமெரிக்காவை
வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்
கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்

ஆண்: நம் காதலை
கவிபாடவே ஷெல்லியின்
வைரனின் கல்லறைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்

பெண்: விண்ணைத்தாண்டி
நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றைக்
கழிக்கிறாய் பிள்ளை மனம்
பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ

ஆண்: வாடைக் காற்றுக்கு
வயசாச்சு வாழும் பூமிக்கு
வயசாச்சு கோடி யுகம்
போனாலென்ன காதலுக்கு
எப்போதும் வயசாகாது

பெண்: ஹைர ஹைர
ஹைரப்பா

ஆண்: ஹைர ஹைர
ஹைரப்பா

ஆண்: ..................................

பெண்: செர்ரி பூக்களைத்
திருடும் காற்று காதல்
சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில்
தாவும் பறவை என்னிடம்
சொன்னது ஐ லவ் யூ

பெண்: உன் காதலை
நீ சொன்னதும் தென்றலும்
பறவையும் காதல் தோல்வியில்
கலங்கியதே

ஆண்: ஒற்றைக் காலிலே
பூக்கள் நிற்பது உன் கூந்தலில்
நின்றாடத்தான் பூமாலையே
பூச்சூடவா

ஆண்: சிந்தும் மழைத்துளி
மண்ணில் வீழ்வது உன்
கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா

பெண்: இதயம் துடிப்பது
நின்றாலும் இரண்டும் ஓா்
நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது

ஆண்: ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

ஆண்: பிஃப்டி கேஜி
தாஜ் மஹால் எனக்கே
எனக்கா பிளைட்டில் வந்த
நந்தவனம் எனக்கே எனக்கா

பெண்: ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

பெண்: பக்கெட் சைசில்
வெண்ணிலவு உனக்கே
உனக்கு பேக்சில் வந்த
பெண் கவிதை உனக்கே
உனக்கு

ஆண்: உன்னை எடுத்து
உடுத்திக்கலாமா ஆ ஆ
ஆ உதட்டின் மேலே
படுத்துக்கலாமா ஆ ஆ ஆ

பெண்: முத்தமழையில்
நனைஞ்சுக்கலாமா கூந்தல்
கொண்டே துவட்டிக்கலாமா

ஆண்: பட்டுப் பூவே
குட்டித் தீவே விரல்
இடைதொட வரம்
கொடம்மா

ஆண் & பெண்: ஹைர ஹைர
ஹைரப்பா ஹைர
ஹைர ஹைரப்பா

ஆண்: ..................................

A little space to find your voice.

About Enake Enaka

Enake Enaka is a song from Jeans (1998). Performed by P. Unnikrishnan, Pallavi. Music by A. R. Rahman. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer