Maala Karukkaliley Song Lyrics

Enga Ooru Kavalkaran·1998

Enga Ooru Kavalkaran movie poster
Singer
P. Susheela and Mano
A continuous glide, at your pace.
Text size

பெண்: நல்லாருக்குது ஊரு
இது உண்டாக்கினது யாரு

குழு: தந்தனதனத் தானா
தன தந்தனதனத் தானா

பெண்: எல்லோருக்கும் ஒரு சாமி
இது சாமி கொடுத்த பூமி

குழு: தந்தனதனத் தானா
தன தந்தனதனத் தானா

பெண்: வாரிக் கொடுக்கும் சாமி
பேரு மாரி

குழு: அட தான தந்தன
தான தந்தன தானா

பெண்: அவபேர படிக்க ஊரு
செழிக்கும் ஏரி

குழு: அட தான தந்தன
தான தந்தன தானா

குழு: லுலுலுலு லுலுலுலு.....

ஆண்: மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
சேலை உடுத்தன
சோலை உனக்கொரு
மாலை இருக்கு புள்ள
ஓலை திருமண ஓலை
கொடுத்திட வேளை வருதுப்புள்ள

பெண்: மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

ஆண்: நீயும் நானும் ஒண்ணு
கேளு கேளு கண்ணு
ராகம் தாளம் போல
சேர போறோம் ஒண்ணு

பெண்: சொந்தமிப்போ வந்ததில்லை
சோகங்களே கண்டதில்லை
சொக்கி மடியில
நான் விழும்போதுல சொர்க்கம்
இது போல் என்றுமில்லை

ஆண்: கண்ணுல தூக்கமில்ல
காரணம் கூறுபுள்ள
நெஞ்சிலே நான் விழுந்தேன்
எண்ணமோ மீளவில்லை

பெண்: நேரம் முழுவதும்
நெஞ்சிலிருப்பது நீதானே
வேறில்ல

ஆண்: மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

பெண்: மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

பெண்: வேற ஜாதிமுல்லை
நானும் கன்னிபுள்ள
பாதை மாறவில்ல
பேதம் ஊருக்குள்ள

ஆண்: ஆயிரம்தான் சொல்லட்டுமே
வேலி ஒண்ணு கட்டட்டுமே
அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது
ஆசை இது போல் வாழட்டுமே

பெண்: நெஞ்சிலே சாஞ்சிகிட்டா
நிம்மதி தேறுமையா
நித்தமும் உன் மடிதான்
பொண்ணுக்கு போதுமய்யா

ஆண்: நூறு தலைமுறை வாழும்
வழிமுறை நாம் காப்போம்
பூவாயி

பெண்: மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

ஆண்: சேலை உடுத்தன
சோலை உனக்கொரு
மாலை இருக்கு புள்ள
ஓலை திருமண ஓலை
கொடுத்திட வேளை வருதுப்புள்ள

பெண்: மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

ஆண்: மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

A little space to find your voice.

About Maala Karukkaliley

Maala Karukkaliley is a song from Enga Ooru Kavalkaran (1998). Performed by P. Susheela, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer