Nalla Kaaraam Pasu Song Lyrics

Muthu Kaalai·1995

Muthu Kaalai movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அட டிய்யோடடிய்யோ
டிய்யோடடிய்யோ ஹோஹோஹோய்
அட டிய்யோடடிய்யோ
டிய்யோடடிய்யோ ஹோஹோய்...

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
புல்லாங்குழல் எடுத்து
பாட்டுச் சொல்வான் முத்துக்காள

ஆண்: யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
கறந்திடும் எந்நாளும் ஏழு படி பாலுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு....ஹோய்

ஆண்: ஹேய் பசு மாடு ஒன்று மடி வத்தி போச்சு என்று
நீ அடி மாடுயென்று அத விக்கப் போகலாமா
அதுமட்டும் ஆகாது எந்நாளுமே
உனை விட்டு போகாது ஒன் பாவமே

ஆண்: எப்போதும் நன்றி கெட்ட ஜாதி நம்ம ஜாதி
செத்தாலும் கால்சோடாகும் வாயற்ற பிராணி
என்னான்னு நானும் சொல்ல கெட்டுப் போச்சு பூமி
எப்போது மனுஷனுக்கு புத்தி தரும் சாமி

ஆண்: பாலுதான் தந்த மாடுதான்
இங்கு இன்னொரு தாயென
எப்போதும் கெஞ்சிட வேணும்

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு

ஆண்: நாம் தெனம் மாடு மேய்ச்சா
இதிலென்ன கேவலம்டா
கோ...பால் சாமி கூட
பசு மாட்ட மேய்ச்சவன்டா

ஆண்: எங்கேயோ ஒரு மாடு திசை மாறினா
எனைத் தேடி வரும் பாரு குழலூதினா
அன்றாடம் காதில் விழும் மாடு கத்தும்போது
அம்மான்னு நாம சொன்ன ஆரம்ப வார்த்தை

ஆண்: அம்மாவ பார்த்ததில்ல நான் பொறந்தபோது
கோமாதா போல ஒரு தாயிங்கு ஏது
பாசமா உயிர் நேசமா
இது காட்டுது பாலையும் ஊட்டுது ஒவ்வொரு நாளும்

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம்
காட்டுப் புல்ல மேயயிலே
புல்லாங்குழல் எடுத்து
பாட்டுச் சொல்வான் முத்துக்காள
யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான்
நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு
இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு
தனதந்தனதந்தன தந்தன நானானானா.....
தனதந்தனதந்தன தந்தன தாங்தாங்தாங்தக தா....

A little space to find your voice.

About Nalla Kaaraam Pasu

Nalla Kaaraam Pasu is a song from Muthu Kaalai (1995). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer