Raasa Leelai Song Lyrics

Aboorva Sakthi 369·1991

Aboorva Sakthi 369 movie poster
Singer
S. P. Balasubrahmnayam and S. Janaki
Lyricist
Pavun Raj
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்

ஆண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

பெண்: கல்விக்கூடம் போகையில்
காதல் பாடம் நல்லதா
கண்ணின் ஜாடை பேசுதல்
தேவை இல்லை அல்லவா

ஆண்: காதல் இன்றி பாடமா
படிப்பதென்ன வேதனை
அந்தி நேரக் கல்விதான்
தந்ததெந்தன் சாதனை

பெண்: தேனைப் போலப் பேசிக் கெடுத்த
தீமையாகும் நண்பனே

ஆண்: மேனி கண்ட பருவ தாகம்
மூடி மறைக்க முடியுமா

பெண்: உதய கீதம் பாடி என்னை
மயக்க வேண்டாம் இதய ராஜ

பெண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்

ஆண்: தூரல் போடும் நீர்த் துளி
மாறன் வீசும் மலர்க் கணை
மாலை நேர மயக்கமே
உதட்டில் உந்தன் புன்னகை

பெண்: நேரம் காலம் பார்த்து நீ
கொஞ்ச வேண்டும் என்னிடம்
ஆசை மீறிப் போனதால்
அஞ்சி நின்றேன் உன்னிடம்

ஆண்: கொட்டும் மழையில் நடுக்கம் நீங்க
இடையை நானும் பிடிக்கவா

பெண்: இடையை மறந்து குடையைப் பிடித்தால்
உந்தன் நடுக்கம் தீருமே

ஆண்: தழுவும் போது நழுவி ஓடும்
எண்ணம் ஏனோ இதய ராணி

ஆண்: ராச லீலைக் காலம் காதல் யோகம் ஆகும்
மௌனமே கீதமாய் தென்றலாக வீசும்
ராச லீலைக் காலம்

இருவர்: காதல் யோகம் ஆகும்

ஆண்: ராச லீலைக் காலம்

இருவர்: காதல் யோகம் ஆகும்

A little space to find your voice.

About Raasa Leelai

Raasa Leelai is a song from Aboorva Sakthi 369 (1991). Performed by S. P. Balasubrahmnayam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pavun Raj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer