Sri Ranga Ranganathanin Song Lyrics

Mahanadhi·1994

Mahanadhi movie poster
Singer
S. P. Balasubrahmanyam, Uma Ramanan and Shobana
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

மற்றும் ஷோபனா

பெண்கள்: கங்கா சங்காச காவேரி
ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசாரி
நமஸ்தேஸ்து சுகாசரி

பெண்: ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ......
ஹா....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ......

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி......
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி......

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி......
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி......
இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி

பெண்: இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி

பெண்: கொள்ளிடம் நீர் மீது
நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்

பெண்: அந்நாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்....ம்ம்......

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி.....
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி......
இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி.....
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி......

ஆண்: கன்னடம் தாய் வீடு
என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு
தென்னகம் ஆகும்
கங்கையின் மேலான
காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட
முன் வினை தீர்க்கும்

ஆண்: நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி....
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி....ஈ.....

ஆண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி.....
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி......
இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

ஆண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி.....

இருவர்: ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்
வந்தனம் செய்யடி.....
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி......

A little space to find your voice.

About Sri Ranga Ranganathanin

Sri Ranga Ranganathanin is a song from Mahanadhi (1994). Performed by S.P. Balasubrahmanyam, Uma Ramanan, Shobana. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer