Solladha Raagangal Song Lyrics

Mahanadhi·1994

Mahanadhi movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: துவக்கம் எங்கே
இது வரை சரிவரப் புரியவில்லை

ஆண்: தொடங்கியதை தொடர்ந்திடப்
புதுவழி தெரியவில்லை

பெண்: புதிர்களும் புதுக்கவி
புனைந்திட

ஆண்: நெருங்கிட இரு மனம் மருகிட

பெண்: மயங்குதே.....கலங்குதே

ஆண்: சொல்லின்றியே.....தயங்குதே

பெண்: அலைகள் எழுந்து கரைகள் கடந்து
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னால் என்ன

பெண்: சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னால் என்ன

ஆண்: நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தால் என்ன

பெண்: எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ.....

ஆண்: சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னால் என்ன

குழு: அஹ ஹா ஹா ஹா........
அஹ ஹா ஹா ஹா........

குழு: அஹ ஹா ஹா ஹா........
அஹ ஹா ஹா ஹா........

ஆண்: காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்

பெண்: காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்

ஆண்: கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்

பெண்: வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண் பாவை உந்தன் தஞ்சம்

ஆண்: ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ......

பெண்: சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னால் என்ன

ஆண்: நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தால் என்ன

குழு: ஆஹஅஹா ஹாஹா
ஆஹஅஹா ஹாஹா ஆஹா.....

பெண்: நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்

ஆண்: வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்

பெண்: பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்

ஆண்: நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்

பெண்: நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புது யுகம் அரும்பலாம்......

ஆண்: சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னால் என்ன

பெண்: நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தால் என்ன

ஆண்: எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்....

பெண்: சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னால் என்ன

ஆண்: நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தால் என்ன

A little space to find your voice.

About Solladha Raagangal

Solladha Raagangal is a song from Mahanadhi (1994). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer