Uyire En Uyire Song Lyrics

Dreams·2004

Dreams movie poster
Movie
Dreams
Singer
Harish Raghavendra and Chorus
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண்: உயிரே என் உயிரே
எந்த திசை போகிறாய்
கனவே என் கனவே
அவள் இன்றி தோன்றினாய்

ஆண்: எனக்குள்ளே நிகழ்ந்ததை
எழுதினேன் கனவுகளில்
கனவுகள் நிஜம் என்று
நிறுத்தினேன் நினைவுகளில்

ஆண்: உயிரே என் உயிரே
எந்த திசை போகிறாய்

குழு: போச்சு போச்சுடா போச்சுடா
பல பேச்சலர் கனவுகள் போச்சுடா
மூச்சு மூச்சுடா மூச்சுடா
அவ கூடவே போகுது மூச்சுடா

குழு: ஒரு முறை ஒரு முறை பார்த்துக்க
இனி பார்த்திட தருணம் வராது
ஏக்கத்தை முழுசா தீத்துக்க
இனி பேசவும் பழகவும் தகாது
போச்சுடா போச்சுடா போச்சுடா...ஆ....

ஆண்: கல்விச்சாலை நாளில்
சாய்ந்திருந்தாய் தோளில்
அந்த சுகம் காதல் என்கிறேன்
என்னை சுற்றி நீயும்
உன்னை சுற்றி நானும்
வந்ததுதான் காதல் என்கிறேன்

ஆண்: உன் பார்வைகள் மூலம்
நீ தந்த ஏக்கம்
அதன் பெயர் காதல் என்கிறேன்
உன் வார்த்தைகள் மூலம்
நான் கொண்ட மோகம்
அதை நான் காதல் என்கிறேன்
உன் நினைவே சுவாசம் என்றால்
உண்மை என்கிறேன்

ஆண்: உயிரே என் உயிரே
உயிரே என் உயிரே

ஆண்: ஆஹாஹா ....ஆ.....ஆஅ.....ஆ....ஆஅ....

பெண்: ஹஹஹஹஹா.......

குழு: தித்திக்கும் தித்திக்கும்
வாலிபர் கூட்டங்களும்
முட்டிதான் ருசிக்கத்தான்
கண்களின் பார்வைகளும்
இது மகரந்தம்
சேர்ந்திடும் நேரம்
பல வண்டுகள் வட்டம் போடும்
அடி பல பல மின்னும்
பொன்னிற மேனியை
சந்தன சாரல் மூடும்
அடி பழம்கொத்தி தின்னும்
பார்வைகள் பார்த்தால்
கனி என உன்னை தீண்டும்
தந்தன தந்தன தானனானான

பெண்: ஹா....ஆஆ....ஹா....ஆஅ....

ஆண்: புத்தகங்கள் ஏல்லாம்
முத்தங்களின் காயம்
மூடி வைத்து பாதுகாக்கிறேன்
என் அறையில் எங்கும்
உன் பெயரின் கீறல்
இன்னும் அதை பூஜை செய்கிறேன்

ஆண்: உன் விரல் பட்டு
என் இடம் உள்ள
காகிதத்தில் உன்னை பார்க்கிறேன்
உன் தலை தொட்ட
பூக்களை கூட
பத்திரமா சேர்த்து வைக்கிறேன்
தேவதையே உன்னை மட்டும்
தொலைத்தேன் என்கிறேன்

ஆண்: உயிரே என் உயிரே
எந்த திசை போகிறாய்
கனவே என் கனவே
அவள் இன்றி தோன்றினாய்

ஆண்: எனக்குள்ளே நிகழ்ந்ததை
எழுதினேன் கனவுகளில்
கனவுகள் நிஜம் என்று
நிறுத்தினேன் நினைவுகளில்

ஆண்: ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ...ஆஅ....

A little space to find your voice.

About Uyire En Uyire

Uyire En Uyire is a song from Dreams (2004). Performed by Harish Raghavendra, Chorus. Music by Bharathwaj. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer